பக்கம்:முல்லைக்கொடி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 89

புகழ்:நட்ட-நிலைபெறச் செய்த;8.பால்நிற வண்ணன்- பலராமன், 9. பொருமுரண் - போர் புரியவல்ல மாறுபாட்டினால், பொலம்புனை - பொன்னால் பண்ணப்பட்ட நேமி - சக்கரம்; 10. திருமறு - திருமகளாகிய மறு; திறல் சான்ற - பலம் பொருந்திய, 11. ஒளிர் - ஒளிவீசும்; மேவரும் பொருந்திய 12. குரால் கறுமை கலந்த பொன்னிற எருது; 13. மடங்காப் போர் - மீளாச் சண்டை; 14. வெரு வந்த - அச்சம் தரவல்ல; 15 பொருவரும் - ஒப்புமை காட்டலாகா, 16. கொண்மூ - மேகம், 17. புரிபு - விரும்பி; 18. முள் எயிறு - கூரிய பல், ஏஎர் - அழகு, 19. எருத்து - கழுத்தின் கண், 20 வை மருப்புகூரிய கோடு; 21 கதன் - கோபம், அஞ்சான் அஞ்சாமல்; ஈர் அரிஇருகண்கள்; 22. வெரூஉப் பிணை - மருண்டு நோக்கும் பெண்மான்;23. குரூஉக்கண்- செந்நிறக்கண், குழை- காதணி;24. வேய்உறழ் - மூங்கில் போலும்; 25. வெந்துப்பு - கொடியபலம், 26. நல்லாரை ஆயர் - நல்ல ஆயர்: 27. வாய் - தன் இடத்தை, மிடை - பரண் 30. குறையா மைந்தா - வலிகுறையாத ஆயர், கோள்ளதிர் - தழுவுதலுக்கு எதிராக 31. நறை - நறு மணப் புகை, விடா - விடப்பட்டு நிறுத்தன ஏறு - நிறுத்தப்பட்ட ஏறுகள், ஏறுகள் எதிர் எடுத்த என மாற்றுக. 32-33 ஏற்றின்மேல் நிலை மிகல் இகலின் - எருதுகள் மேல் கொண்ட மிக்க மாறுபாட்டினால், மிடை இழிபு கழிப் என மாற்றுக. பரணினின்றும் இறங்கிச் சென்று; 34. புரை - ஒத்த, மாறு அஞ்சான் - மாறுபாட்டிற்கு அஞ்சானாய், 37. கோள்விடுக்கும் - பற்றியிருப்பதை விடுவிக்கும், 39. பலர் உடன் என்பதை முன்னே கூட்டுக, எழுபு இரிபு என மாற்றுக. எழுபு - எழுந்திருந்து; இரிபு - சென்று; அதிர்பு - அதிர்ந்து, இகந்து - நிலைகெட்டு, 40, அரிபு - (எலும்பு) முறிந்து, இறுபு - (குடர்கள்) அற்று 41. திரிபு - திரிந்து, உழக்கும் - அலைக்கழிக்கும்;42. வாடில் - என்றும் குறையாத; 43. வெருவருதூமம் - மதம் கொள்வதற்குக் காரணமான புகை;45. தாள் - முயற்சி, துணி - துணிந்த, பிணி - ஏறுதழுவல்; தவிர்பு இன்றி - கெடுதல் இல்லாவாறு, தலைச்சென்று - மேலேசென்று;46. சாய்ந்து - தழுவி; 48. புகர் - செந்நிறம், மண்டு அமர் - பெரிய போர், 49. ஒவ்வான் - நிகராகான் பெயரும் - வறிதே மீளும், 50 மீளிமறவன் - கூற்றுவனை ஒத்தவீரன். 52. சார - தழுவ:53. தடிகுறை - தசைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/91&oldid=707935" இலிருந்து மீள்விக்கப்பட்டது