பக்கம்:முல்லைக்கொடி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இ புலவர் கா. கோவிந்தன்

பிண்டங்கள் இறுபு - அற்று, தாயின - பரவி, 54, இடிஉறழ் - இடியொலி போலும், இயம் - இசைக்கருவி, 57. புரிபு - விரும்பி, மடங்க - அழிய தொழு 60. புலம் - புல் மேயும் இடம்; தண்டா - அழியாத, 61. மல்லல - வளம் மிக்க; 62, அயர்வர் - ஆடி மகிழ்வர்; தழுஉ - குரவை, 65. சிவலை - சிவந்த சுட்டி, நிறை - ஆற்றல்; 66. செற்றார் - பகைத்து அலர் கூறுவார்; 67. பெற்றத்தார் - பசுக்களை உடைய ஆயர்; கவ்வை - அலர்; 68. உற்றியாள் - வருந்தாள்; ஆயர்மகள் எனத் தன்னைப் பிறர்போலக் கூறினாள். 69. தொழி.இ.இ - தோழி! 70. அருக்குதல் - வருத்துதல்; அல்லல் - துன்பம் தரும் 71. குரூஉக்கண் - கோபத்தால் சிவந்தகண்; 73. கோள் - அடக்குதல், அரிதாக - அரிது என்றுகூறி, 75. கொடை நேர்ந்தார் - கொடுக்க இசைந்தார்; 76. ஊரார் - அலர் கூறிய ஊர்ப்பெண்கள்; உச்சி மிதித்தல் - இழிவு படுத்ததுல், ஒரு பொருட்டாக மதியாமை. 78. திகிரியான் - சக்கரப் படையுடைய திருமால், ஒல்கா - கெடாத, 79. உரும் - இடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/92&oldid=707936" இலிருந்து மீள்விக்கப்பட்டது