பக்கம்:முல்லைக்கொடி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 புலவர் கா. கோவிந்தன்

தீதின்றிப் பொலிக என அரசனை வாழ்த்திப் பறை யறைந்து விழா அறிவித்தான்்.

விழாக்கோள் கேட்ட ஆயர்கள், ஆடவரும், மகளிரும், இளையோரும், முதியோரும் ஊர் மன்று அடைந்தனர்; பெற்ற மகளிர்க்கு மணம் குறித்து மனக் கவல்ை கொண்டிருந்த ஆயர், தம் மகளிரோடும் அம் மகளிர்க்கு என வளர்த்த காளைகளோடும் வந்து சேர்ந்தனர். மகளிரைப் பரண்மீது அமர்த்திக் காளை களைத் தொழுவினுள் விடுத்தனர்.

நேமிப் படையேந்திய நீலவண்ணத் திருமால், வாயில் வைத்து ஊதிய வெண்சங்கு போல, வெண்ணிறச் சுட்டி விளங்கும் நெற்றியை உடைய கருநிறக் காளை;

யமுனையாறு அளித்த ஒற்றைக் குழையுடை யோனாய பலராமனின் வெண்ணிற மேனியில் கிடந்து புரளும் செம்மலர் மாலைபோல், மார்பில் சிவந்து நீண்ட மறு விளங்கும் வெள்ளேறு;

கணிச்சிப் படை ஏந்தியவனான கண்ணுதலோ னுடைய நீல கண்டம் போல், கருநிற மறு அமைந்த கழுத்தும், உயர்ந்த இமிலும் வாய்ந்த கருமை கலந்த பசும் பொன்னிறக் காளைக் கன்று;

வச்சிரப் படை யேந்திய விண்ணவர் கோவின் ஆயிரங்கண் விளங்கும் அழகிய மேனி போல், உடல் எங்கும் புள்ளிகள் பொருந்திய பேராற்றல் வாய்ந்த பெரிய

எருது;

முருகன், தன் செம்மேனியில் வெள்ளாடை உடுத்து விளங்கும் தோற்றம் போல், கால் வெளுத்து உடல் சிவந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/94&oldid=707938" இலிருந்து மீள்விக்கப்பட்டது