பக்கம்:முல்லைக்கொடி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 93

காளை, எவ்வுயிரையும் அழிக்கவல்ல காலன் போலும், ஆற்றல் வாய்ந்த ஏறுகள் அத்தொழு நிறைய விடப்பெற்றன. உலகத்து உயிர்களெல்லாம் ஒருங்கே அழியும் ஊழிமுடிவில் அவ்வுயிர்களை அழிக்கும் தொழில் மேற்கொண்ட ஊழிப் பெருந்தீயும், கணிச்சிப் படையும், காலனும், அவன் ஏவலாளரும் ஒன்று கூடி, அவ்வுயிர்களைத் தேடி உலகெலாம் உழன்று வருதல் போல், அக்காளைகள் சிறிது நாழிகையும் ஒய்ந்து நில்லாது தொழுவினுள் சுழன்று சுழன்று வந்தன.

பரண்மீது அமைத்துள்ள மேடைகளில், மனங் கொள்ளப் போகும் ஆயர்குல மங்கையர் வரிசை வரிசையாக வந்து அமர்ந்தனர். இடிகள் பலக.டி இடித்து முழங்கினாற்போல், பறைகள் பல முழங்கின. கொண்டல் கொண்டலாய் மேகங்கள் எழுவது போல், நறுமணப்புகை நாற்புறமும் எழுந்து படர்ந்தது. பார்த்திருப்போரின் இரு கண்களும் மறையுமாறு பெரும் புழுதி எழ, ஆயர்குல இளைஞர்கள் ஆரவாரம் செய்து கொண்டே தொழு வினுள் புகுந்தனர்.

ஒரு காளை மீது பாய்ந்து அதன் கொம்புகளைப் பற்றி அடக்க முனைந்தான்் ஓர் இளைஞன், காளையைத் தன் மார்போடு மார்பாக இறுகத் தழுவிக் கொண்டான் ஒருவன்; காளையொன்றின் கழுத்தின் மீது ஏறி அமர்ந்து பிடி விடாமல் அணைத்துக் கொண்டான் ஒருவன்; ஒரு காளையின் முதுகில் அதன் இமில் முறியுமாறு பாய்ந்து தழுவிக் கிடந்தான்் ஒருவன்; ஒர் இளைஞன் காளையொன்றின் கழுத்தைத் தன் இரு தோள்களுக் கிடையே விட்டு இறுக்கிக் கொண்டிருந்தான்். காளையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/95&oldid=707939" இலிருந்து மீள்விக்கப்பட்டது