பக்கம்:முல்லைக்கொடி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ஆ. புலவர் கா. கோவிந்தன்

கோடுகள் தன் மார்பில் ஊன்றித் தைப்பதையும் உணராது அதை அடக்க முனைந்திருந்தான்் ஒருவன்.

இவ்வாறு, இளைஞர்கள் வரிசை வரிசையாக வந்து தம்மைத் தழுவ முனைவதைக் கண்ட காளைகள், கடுஞ் சினம் கொண்டு, அவர்கள் மீது பாய்ந்து, அவர்களைக் கோடுகளால் குத்தித் தழுவவிடாது தள்ளித் துரத்திவிட்டு, மீண்டும் அவர் வாராவாறு, அவரையே வெறித்து நோக்கி நின்றன. காளைகள் முட்டி முட்டித் தள்ளுவதையும் பொருட்படுத்தாது, ஒர் இளைஞன், மீண்டும் முன்வந்து, தான்் விரும்பிய செந்நிறக் காளையைக் கட்டிப்பிடிக்க முனைந்தான்். அவனை, அக் காளை, தன் கோட்டால் அவன் உயிர் போகுமாறு முட்டித் தள்ளிவிட்டு, மேலும் வருவார் எவரேனும் உளரோ என வெகுண்டு நோக்கி நின்றது. ஒருவரின் உயிர் போகும் காலத்தில், அவரைப் பின் தொடர்ந்து சென்று, அவர் உயிரைப் போக்கிவிட்டுப், பிற உயிரைப் பற்றற்காம் காலத்தை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கும் காலன்போல் காட்சி அளித்தது, அக்காளை.

செம்மையும் கருமையும் கலந்த நிறம் வாய்ந்த ஒரு காளை, தன்னைத் தழுவ வந்தான்ைக் குத்திச் சாய்த்துவிட்டு, அச்செருக்கால், சுற்றியிருப்பாரைத் தலை நிமிர்ந்து நோக்கிற்று. இளைஞனைக் குத்தியபொழுது, அதன் கோட்டு முனையில் பட்ட அவன் குருதி, காளை தலை நிமிர்ந்ததும், அக்கோட்டின் மேல் வழிந்து, அதற்குச் செந்நிறம் ஊட்டிற்று. செந்நிறம் பெற்ற அக்கோடுகளின் முனையில், சுற்றிக் கட்டப் பெற்றிருந்த சின்னஞ்சிறு மணிகள், நறவம்பூ அரும்பு மலரும் பருவத்தை எதிர் நோக்கி, அவ்வரும்பைச் சுற்றிச் சுற்றிப் பறந்து திரியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/96&oldid=707940" இலிருந்து மீள்விக்கப்பட்டது