பக்கம்:முல்லைக்கொடி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 95

தும்பிகள்போல் தோற்றம் அளிக்கக் கண்டு, ஆங்குக் கூடியிருந்தவர் அஞ்சி வியர்த்தனர்.

கறுத்துத் திரண்ட தோள்கள் வாய்க்கப் பெற்ற ஓர் இளைஞன், தான்் அடக்க விரும்பிய வெள்ளேற்றின் மீது பாய்ந்து, அதன் கழுத்தை இறுகத் தழுவிக் கொண்டான். அதனால் கடுஞ்சினம் கொண்ட காளை அவனைத் தாங்கியவாறே துள்ளி ஒடித், தொழுவை அடுத்திருந்த பரண் நோக்கிப் பாய்ந்தது. தன்னைக் கவ்வியிருக்கும் கருநாகத்துடனே விண்ணில் உலா வரும் வெண்திங்கள் போல் காட்சி அளித்த அக் கொல்லேறு கண்டு கலங்கினார் பலர்.

இவ்வகையால், ஏறு தழுவும் விழா இனிதே முடிந்தது. ஏறுகளும் இளைஞர்களும் போரிட்ட அத் தொழு, பேரரசர் இருவர் பகை மேற்கொண்டு போரிட்ட களம்போல் காட்சி அளித்தது.

காதலர்கள் காளைகளைக் கட்டிப் பிடிக்கும் காட்சியைத் தத்தம் தோழியர் தனித்தனியே சுட்டிக் காட்டக் கண்டு களித்திருந்தனர் ஆயர்குலக் கன்னியர்.

ஆங்குக் கூடியிருந்த தோழிப் பெண்களுள் ஒருத்தி மிகவும் குறும்புக்காரி, ஆயர்பாடித் தலைவன் மகளுக்குத் தான்் தோழி என்ற செருக்கு அவளுக்கு; அதனால், அவள் பால் இயல்பாகவே அமைந்திருந்த குறும்புத்தனமும் அதிகமாயிற்று; அவள் துணைவியாகிய ஆயர்பாடித் தலைவன் மகளுக்கும் அதுகாறும் திருமணம் நடை பெறவில்லை; அன்று அவளுக்கும் மாப்பிள்ளைத் தேர்வு நடைபெற்றது; அவளுக்கு என விடப்பெற்ற எருதை ஒர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/97&oldid=707941" இலிருந்து மீள்விக்கப்பட்டது