பக்கம்:முல்லைக்கொடி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி ஆழ் 97

அந்நிலையில் அவர் கொண்ட சினமும், அவர் நம்மைப் பார்த்த பார்வையும், அம்மம்ம! இன்று நினைத்தாலும் என் நெஞ்சம் நடுங்குகிறது. தொடக்கத்தில் கண் சிவக்கச் சினந்து, இறுதியில் நம் காதலன் முன் அடங்கிக் கிடக்கிறதே, அதோ, அக் காளை! அதுபோல் அன்று கடுஞ்சினம் கொண்ட இவர்கள் இன்று என்ன செய்வரோ?" என அப் பெண்ணுக்குக் கூறுவாள்போல், அவ்வுறவினர் கேட்குமாறு கூறி, அவரை எள்ளி நகைத்தாள்.

அவள் குறும்புத்தனம் அத்துடனும் நிற்கவில்லை. இருவர் இருக்கும் இடம் நோக்கி, உறவினரைத் தொடர்ந்து, ஊரார் வரக் கண்டாள். உடனே, "பெண்ணே ! நம்மூர்க் கோட்டினத்தாயனாய, அதோ நிற்கும் அவ்விளைஞன்மீது நாம் காதல் கொண்டோம்; நம் காதல் கண்டு நம் பெற்றோர் ஒன்றுங் கூறவில்லை; அவர் அதை ஒருவாறு தாங்கிக் கொள்ளவும் செய்தனர்; ஆனால், அதோ வருகின்றார்களே, இவ்வூரார்! அவர்கள், அன்று நம்மை நோக்கிய நோக்கினை இன்று நினைத்தாலும் என் நெஞ்சம் நடுங்குகிறது. கண்கள் தீப்பொறி பறக்க நம்மைச் சினந்து நோக்கியவர்கள், இன்று என்ன செய்வார்களோ?" என அவர்கள் கேட்டுத் தலை குனியுமாறுங் கூறி நகைத்தாள்.

அம்மட்டோடும் அவள் குறும்பு அடங்கவில்லை. இருவரும் தொழுவை விட்டு வெளியேறிச் செல்லும் இடை வழியில், தாய் நிற்பதைக் கண்டாள் தோழி. உடனே அவளைப் பாராதவள்போல, ஆனால், அவள் காதுகளில் படுமாறு, 'பெண்ணே இவ்வூர்ப் பெண்கள்தாம்

முல்லை-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/99&oldid=707943" இலிருந்து மீள்விக்கப்பட்டது