பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டினியல்பு. கள் தம் அரிய கலாபத்தினை விரித்துப் பெடைமயில் கண் களிப்ப ஒரு புறம் ஆடுதலையும், மலையருவிநீர் கூழாங்கற்படை யின் மேற் சிலுசிலுவென்று ஓடி வந்து அச்சோலையின் ஒரு பக்கத்துள்ள ஆழ்ந்த குட்டையில் நிரம்பித் துளும்ப அதி லுள்ள செந்தாமரை முகிழ்கள் அகன்ற இலைகளின் மேல் இதழ்களை விரித்து மிகச்சிவப்பாய் அலர்தலையும் விரும்பிக் கண்டு நறுமணங்கமழும் பூக்களை மரங்களினின்றுந் தாவிப் பறித்துக் கரிய கூந்தலில் மாறிமாறி அணிந்தும், சிவக்கப் பழுத்த கொவ்வைக் கனி போன்ற தம் இதழ்கள் அழுந்த முத் தம் வைத்துக்கொண்டும், தேன் ஒழுகினாற்போல மதுரமான நேசமொழிகள் பேசிக்கொண்டும் அவர்கள் செல்லுமிடத்து அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும். சுருங்கச்சொல்லுங்கால் எங்கெல்லாம் நமதணர்வை வசீ கரிக்கின்ற பேரழகு உலக இயற்கையிற் காணப்படுமோ அங் கெல்லாம் பாட்டு உண்டென்பது தெளியப்படும். ஆயினும், ஒரு நல்லிசைப் புலவனால் இயற்றப்படுகின்ற பாட்டுப்போல அது நூலினிடத்தே காணப்படுவதில்லையேயெனின்; அறி யாது வினாயினாய், ஒரு நூலின் க ண் எழுதப்பட்டு உலக இயற்கையின் அழகை நமதுள்ளத்திற் பொருத்திக்காட்டி நமக்கு உணர்வு பெருக்குஞ் சொல்லின் தொகுதியான் பாட்டு நூலின்கண் எழுதப்படுகின்ற வடிவுடைய பருப்பொருளா கும்; உலக இயற்கையின் அழகோடு ஒற்றுமைப்பட்டுக் கண் முதலான புலன்வழிப் புகுந்து நமக்கு உ ணர்வுமிகுதியினை வருவிக்கும் பாட்டு வடிவு இல்லாத நுண்பொருளாகும். இங் நன மாகலின் உலக இயற்கையிலெல்லாம் பாட்டு உண்டென் பது துணிபேயாமென்க. அல்லாமலும், உயிர் வாழ்நாளில் ஒவ்வொருநாளும் நம் முடைய நினைவுகளெல்லாம் உணவு தேடுதலினும், பொருள் தொகுப்பதினும், மனைவிமக்கட்த வேண்டுவன திரட்டிக் கொடுத்தலினும், பிறர் இட்ட வழியஞ்செய்தலினுமாகப் பல வாறு சிதறி அருமை பெருமையின்றி அவலமாய்க் கழிந்து