பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, போகின்றன. இவ்வாறு கழிந்துபோகும் மக்களுடைய நினைவுகளுஞ் சொற்களுஞ் செயல்களும் நமக்கு இன்பந்தரா வாகலின் அவற்றை அறியவேண்டுமென விரும்புவார் உலகில் யாரும் இலர். இனி, இவ்வாறு கழியும் நாட்களில் ஒரோ வொருகால் அவர் அறிவு அவல நினைவுகளின் வேறாகப் பிரிந்து, உலக இயற்கையழகிற் படிந்து அதன் வண்ணமாய்த் திரிந்து தெளிவுற்று விளங்கும்போது, அவ்வறிவிற் சுரந்து பெருகும் அரிய பெரிய கருத்துக்களையே நாம் அறிவதற்கு மிக விரும்புகின்றோம். இங்ஙனர் தோன்றும் அரிய பெரிய கருத்துக்களின் கோவை ஒழுங்கினையே பாட்டென்றம் அறிதல் வேண்டும், இன்னும் மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடையிலே அவல நினைவுகளான கலங்கல் நீர் பெருகிச் செல்லும்போது, உலக இயற்கை யென்னும் மலைக்குகை களிலே அரித்து எடுத்து வந்த அருங்கருத்துக்களான பொற்று கள் இடையிடையே ஆழ்ந்து அவ்வோடையின் அடிநிலத் திற் சிதர்ந்து மின்னிக்கிடப்ப, நல்லிசைப் புலவன் என்கின்ற அரிப்புக்காரன் மிக வருந்தி முயன்று அப்பொற் சிதர்களை யெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி எடுத்துத் தன் மதிநுட்ப நெருப்பிலிட்டு உருக்கிப் பசும்பொற்பிண்டமாகத் திரட்டித் தருவதே பாட்டு என்றும் அறிதல் வேண்டும். இன்னும் மக்கள் அறிவு என்கின்ற தித்திப்பான அரிய அமிழ்தம் பல வகையான குற்றங்களானுங்கலப்புற்று அசுத்தமாய்ப் போக, நல்லிசைப்புலவன் தன் பேரறிவினால் அதனைத் தெள்ளி வடித்து அதன் இன் சுவையினை மிகுதிப்படுத்தி நாமெல்லாம் பருகிப் பெரியதோர் ஆறுதல் அடையக் கொடுப்பன்; அங் நுனங்கொடுக்கப்படுஞ் சுத்த அறிவின் விளக்கமும் பாட் டென்றே அறிதல் வேண்டும். இக்கருத்துப்பற்றியே மிலிட் டன் என்னும் ஆங்கில மொழிவல்லநல்லிசைப்புலவரும், பாட் டென்பது மக்கள் மன அறிவின் சாரமாய் இறக்கப்பட்ட பரிசுத்தமான அமிழ்தம்" * என்று உரைகூறினார். இது நிற்க. -- - - - --

  • Areopagitica