பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டினியல்பு. இனி இங்ங்னம் இயற்றப்படுகின்ற பாட்டு உலக இயற் கையழகுடன் பெரிதும் பொருந்தி நடத்தல் வேண்டும். இன் னும் இதனை நுணுகி நோக்கு மிடத்துப் பாட்டுப்பாடுதலில் வல்லவனான நல்லிசைப்புலவனுக்கும், உலக இயற்கையினைப் பலவகைவண்ணங்களாற் சித்திரித்துக்காட்டுகின்ற ஓவியக் காரனுக்கும் ஒற்றுமை மிக உண்டென்பது தெள்ளிதிற் புலப்படும். ஆயினும், ஓவியக்காரன் சித்திரிக்கின்ற படம் கட்புலனுக்கு மாத்திரம் தோன்றும்; நல்லிசைப் புலவன் சித்தி ரிக்கின்ற பாட்டோ கண் முதலான புலன்களின் சாரமாய் விளங்கும் உள்ளத்திலே தோன்றும். ஓவியக்காரன் தான் எழுத எடுத்துக்கொண்ட பொருளைப் பன்முறையும் நுண் ணிதாக அளந்தளந்து பார்த்துப் பின் அதனைத் திறம்படச் சித்திரித்தால் மாத்திரம் அப்படத்தைக் கண்டு வியக்கின் றோம்; தான் விரித்து விளக்கமாய் எழுதவேண்டும் பகுதிக ளில் அவன் ஒரு சிறிது வழுவி விட்டா னாயினும் அப்படத் தின் கண் நமக்கு வியப்புத் தோன்றா தொழிகின்றது. நல் லிசைப்புலவனோ அங்ஙனம் அவனைப்போல் ஒவ்வொன்றனை யும் விரிவாக விளக்கிச் சொல்ல வேண்டும் பிரயாசை உடை யான் அல்லன். ஓவியக்காரன் புலன் அறிவைப் பற்றி நிற் பவன்; புலவனோ மன அறிவைப் பற்றி நிற்பவன். புலனறி வோ பருப்பொருள் களை விரித்தறியும் இயல்பிலுள்ளது; மன வறிவோ அப்புலனறிவின் சாரமாய் நின்று நுண்ணிதாம் டொருளையும் தானே ஒரு நொடியில் விரித்தறியும் ஆற்றல் வாய்ந்தது. அம்மம்ம! மனோபாவகத்தின் ஆற்றலை யாம் என் னென்று சொல்லுவேம் ! அணுவை ஒரு நொடியில் மலை போற் பருக்கச் செய்யும், மலையை மறுநொடியில் ஓர் அணுவி னுங் குறுகச்செய்யும். இங்ஙனம் விசித்திர இயல்புடைய மனோபாவகத்தினை நல்லிசைப்புலவன் என்னும் மந்திரகா ரன் தன்மதி நுட்பமாகிய மாத்திரைக்கோலால் தொடுதல் மாத்திரையானே அது திடுக்கென்றெழுந்து அவன் விரும் பிய வண்ணமெல்லாஞ் சுழன்று சுழன்றாடும். இன்னும் இத