பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. னைச் சிறிது விளக்குவாம். ஓவியக்காரன் பயங்கரமாக அகன்ற தோர் கரிய பெரிய காட்டினை எழுதல் வேண்டுமாயின் பல நாளும் பலகாலும் அதன் இயற்கையினை அறிந்தறிந்து பார்த் துப், பரியமரங்கள் அடர்ந்து ஓங்கி ஒன்றோடொன்று பிணைந் து வெளிச்சம் புகுதாமல் தடை செய்து நிற்றலையும், அக்காட் டின் வெளித்தோற்ற அமைப்பினையும், மரங்களின் இடையி லுள்ள சந்து வெளிகளில் நமது பார்வை நுழையுங்கால் அவை தோன்றுந்தன்மையினையும், உள்ளே இருள் தடிப்பாய்ப் பரவியிருத்தலையும் அங்குள்ளவாறே சிறந்த பலவண்ணங் களைக் குழைத்து இரட்டுத்துணியின் மேல் மிக வருந்தி எழுதிக் காட்டல் வேண்டும்; இஃது அவனுக்குப் பலநாள் வேலையாக முடியும். நல்லிசைப்புலவு னோ, 'பரிய மரங்கள் அடர்ந்தோங் கிப் பிணைந்து நிற்குங் கரியகாடு' என்று சில சொற்களைத் திறம்படச் சேர்த்துக் கூறுதல் ஒன்றானே ஒரு நொடிப்பொ ழுதில் அவ்வோவியக்காரனாலுங் காட்டமுடியாத ஒருபே ரற்புத வுணர்வினை நம் மனத்தகத்தே விளைவிக்கும் ஆற்றலு டையனாவான். இஃது அவனுக்கு மிக இலேசிலே முடிவ தொன்றாம். இங்ஙனம் மனோ பாவகத்தை எழுப்புதல் மிக எளிதிலே செய்யக் கூடிய தொன்றாயினும், அம்மனவியல் பின் நுட்பம் உணர்ந்து அவ்வாறு செய்ய வல்லரான நற்பெ ரும் புலவர் உலகிற் சிலரேயாவர். புலவனுடைய திறமை யெல்லாம் " சில்வகை யெழுத்திற் பலவகைப்பொருளைக் காட்டுகின்ற அரும்பெருஞ் செய்கையினாலே தான் அறியப் படும். இங்ஙனம் பாட்டு வழக்கின் நுட்பமுணர்ந்து பிறமொழி களிற் புகழ்பெற்று விளங்கிய நல்லிசைப் புலவர்கள் ஓமர், தாந்தே, செகப்பிரியர், மிலிட்டனார், கீதே, காளிதாசர் முத் லியோரும், நஞ் செந்தமிழில் திருவள்ளுவர், நக்கீரனார் இளங் கோவடிகள், கூலவாணிகன் சாத்தனார், மாங்குடி மருதனார், கபிலர், சேக்கிழார் முதலானோரும் பண்டைக்காலத்துப் பழந்தமிழ்ப் புலவருமேயாம். இன்னும் இதனை விரிப்பிற் பெருகு மென் றஞ்சி இம்மட்டே நிறுத்துகின்றாம்.