பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு.

இனிப் பண்டைக்காலத்துச் செந்தமிழ்ப் புலவரெல் லாரும் உலக இயற்கைத்திறம் பிறழாமல், அதனை நுணுகி ஆராய்ந்து பாட்டுப் பாடும் மனவுறுதி மிகுதியு முடையராயி ருந்தனர். உலக இயற்கையிற் காணப்படும் அருமை பெருமை யிளை மிக வியந்தனர். தம் மனோபாவகத்திற்கு இசைந்த வண் ணமெல்லாம் உலக இயற்கையினைத் திரித்துக் கூறாமல், அவ்வுலக இயற்கையின் அழகின் வழியே தமதறிவினைப் பொருந்தவைத்துத் தம் மனோபாவகத்தினை விரிவுசெய்து விளக்கிவந்தனர். இம்முறைமை தற்பெரும் புலவர்க்கு இன் றியமையாச் சிறப்பின தாம் என்னுங் கருத்துப் பற்றியே இரசிகர் எனும் ஆங்கில மொழியில் உரைவல்ல ஆசிரியர், காட்டு என்ற புலவரைப் பற்றிச் சொல்லவந்த விடத்து அவர் தமதுணர்வின் வழியே உலக இயற்கையினை நிறுத்திக்கொள் ளாமல், அவ்வுலக இயற்கையின் வழியே தமதுணர்வை நிறுத்தி நின்றார்." என்று புகழ்ந்தெடுத்துக் கூறினார். ஆகவே, உலக இயற்கையின் வழி நின்று பாட்டுப் பாடுதலே அரு மையா மென்பதும், அதுவே நல்லிசைப் புலவர்க்கு அடை யாளமாம் என்பதும் இதனால் நன்குபெறப்படும். பழந்தமிழ்ப் புலவர்களெல்லாரும் இந் நுணுக்கம் இனிதறிந்து விளங் கினார்களென்பதற்குப் பழைய தமிழ்ப்பாட்டுகளே சான்றா கும். எனினும், இதனை ஓர் உதாரண முகத்தானும் ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம். முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅது உறீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணு தல் முகனே