பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டினியல்பு. தோன்றும் குனஞ்செயல்களைக் கூறும் புறத்திணைப்பாட்டுக் களில் அவ்வக்குணஞ்செயல்கட்கு உரியோர் பெயர் கூறல் வேண்டுவது இன்றிய ைமயா ததேயாம் என்க. இந்நெறி அறி வுறுத்தற்பொருட்டே ஆசிரியர் தொல்காப்பியனார், புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது அகத்திணை மருங்கின் அளவுதலிலவே என்று கூறினார். இனி அகம் புறம் என்னும் இவ்விருவகை ஒழுக்கமும் கலந்து வரும் பாட்டு களில் அகவொழுக்கமே பெரும்பாலும் முன்னும் பின்னும் தொடர்புற்றுச் செல்ல, அதன் இடை யிலே ஒருபுற வொழுக்கம் சிறுகிவருமாயின், அவற்றுள் ளும் ஒருவர் பெயர் குறித்துச் சொல்லப்படுவதில்லை அவ் வாறன்றி அவற்றுள் முன்னும் பின்னும் ஒருபுற வொழுக் கம் தொடர்புற்றுச்செல்ல இடையிலே ஓர் அகவொழுக்கங் குறுகிவருமாயின் அவற்றுள் அவ்வொழுக்கம் உடையார் பெயர் குணம் முதலாயின கிளந்து சொல்லப்படும். இவ்வா நன்றி அகம் புறவொழுக்கங்கள் இரண்டும் இணைந்து ஒப்ப வருமாயின் அங்கும் அம்மக்கள் பெயர் குணம் முதலாயின கிளந்து சொல்லப்படும் என்பது அறிக. இங்குச் சொல்லப் பட்ட இவ்விலக்கணங்கள் இவ்வைந் நூறாண்டிற் பிறந்த நூல் களினெல்லாம் இனிது காணப்படும். முல்லைப்பாட்டின் இயற்கையும் அதன் பாட்டியற்றிறமையும். இனி இங்கு ஆராய்தற்பொருட்டு எடுத்துக்கொண்ட முல்லைப்பாட்டில் "தன் மனையாளைப்பிரிந்து மற்றை வேந்த ரோடு போர் செய்யப்போவானோர் தலைவன் தான் பிரிவதனை அவளுக்கு நயமாக உணர்த்திக் 'கார்ப்பருவத் தொடக்கத்தில் வருவேன், அதுகாறும் நீ ஆற்றிக்கொண்டிரு' என்று சொல்