பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ . முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. லிப்பிரியா, அச்சொல்வழியே ஆற்றியிருந்தவள் அவன் சொன்ன கார்ப்பருவம் வரக்கண்டும் அவன் வந்திலாமையின் பெரிதும் ஆற்றாளாயினள்; பின் பெருமுது பெண்டிர் பலவகையால் ஆற்றுவிக்கவும் ஆற்றாதவள் 'இங்ஙனம் ஆற்றாது வருந்தல் கணவன் கற்பித்த சொல்லைத் தவறிய தாய் முடியுமாதலால், அவர் வருங்காறும் ஆற்றுதலே முறை' யென்று உட்கொண்டு பொறுமையுடன் இருந்த தலைவியிடத்துச் சென்ற தலைவன் மீண்டுவந்தமை என்னும் அகப்பொருள் இருப்புச் சொல் லப்பட்டமையால் இப்பாட்டின் கட் டலைமகன் தலைமகள் சிறப்புப்பெயர் இன்னவென்று எடுத்துச் சொல்லப்படவில்லை என்று அறிக. இக நனந் தலைமகன் தலைமகளைப் பிரியும் போது ஆற்றுவித்துப்போதலும், போன பின் அவன் வினை முடித்து வருந்துணையும் அவள் ஆற்றியிருத்தலும் இங்குச் சொல்லப்பட்ட தலைமக்களுக்கே யன்றி எல்லார்க்கும் உரிய யனவாகையால் ஆசிரியர் நப்பூதனார் அவர் பெயர் இங்கே டுத்துச்சொல்லாமை பற்றி வாக்கடவதோர் இழுக்கு ஒன்று மில்லையென்றுணர்க. இனி முலை என்னும் அகவொழுக்கத்தோடு இயை புடைய புறவொழுக்கம் வஞ்சி என்பதாம் ; வஞ்சிதானே முல்லையதுபுறனே என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும். வஞ்சி என்பது ஓர் அரசன் வேற்றோர் அரசன் நாடுகைப் பற்றும் பொருட்டுப் படையெடுத்துச்செல்வது வஞ்சித்திணை முல்லைத்திணைக்குப் புறனானவாறு எங்ஙனமெனின்; மனைவி தன் காதலனைப் பிரிந்து மனையின் கண் இருப்பதுபோல அவள் கணவனும் பாடி வீட்டின் கண் இருப்பான் ஆகலா னும், தலைமகள் வீடு காட்டின் கண் இருப்பதுபோலப்பாடி வீடும் பகைவர் நகர்க்கு அரணான காட்டின்கண் அமைக் கப்படும் ஆகலானும் முல்லையும் வஞ்சியுந் தம்முள் இயைபு உடைய ஆயின என்க. இனி நப்பூதனார் என்னும் நல்லிசைப்புலவர் 'முல்லை' என்னும் அகவொழுக்கத்தினை விரித்துச் செய்யுள் இயற்று