பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டினியல்பு. உங் கின்றார் ஆகலின், அதனோடு இயைபுடைய வஞ்சியொழுக் கத்தை அரசன் பகைமேற் சென்று பாசறையிலிருக்கும் இருப்புக் கூறுமுகத்தால் இதன்கண் அமைத்துக்கூறு கின் றார். இவ்வாறு தாம் எடுத்துக்கொண்ட பொருளுக்கு மாறு படாமல் இவ்வாசிரியர் வேறு பொருளை இதன் கட்பொருத்தி உரைக்கும் நுணுக்கம் மிகவும் வியக்கற்பால தொன்றாம். இன்னுந் தாங் கூற வேண்டும் முதன்மையான ஒரு பொருளைப் பொறுக்கான சொற்றொகுதியினால் எடுத்துக் கோவையாகத் திரித்து நூற்றுக்கொண்டு செல்லும்போது, அப்பொருளின் இடையே அதனோடு இயைபுடைய வேறோர் பொருளை இணைத்துச்சொல்லுஞ் சமயம் நேருமாயின், பொரு ளின்பங்கெடாமல் இடன் அறிந்து அதனைப்பிணைப்பது நல் லிசைப்புலவரிடத்துக் காணப்படும் அரியவினைத்திறமையா குமென்பது அறியற்பாற்று. இவ்வரியவினைத் திறமை கப் பூசனார் இயற்றிய இச்செய்யுளின்கண் வெள்ளிடைமலை போல் விளங்கிக்கிடக்கின்றது. 'முல்லை ' என்னும் அக வொழுக்கத்தினை விதந்து சொல்லவந்த ஆசிரியர் அதனை முற்றுக்கூறி முடித்தபின், அதனோடு இயைபுடைய அரசன் போர்மேற் செலவான வஞ்சியைக் கூறுவராயின், கற்கின்ற வர்க்குப் பின் ஒட்டிச் சொல்லப்படும் வஞ்சி ஒழுக்கத்தினைக் கேட்ட லிற் கருத்து : மான்றாமையே யன்றி, இருவேறு ஒழுக் கங்கள் தனித்தனியே சொல்லப்பட்டும் ஒன்றற்கே உரிய முல்லை என்னும் பெயர் மாத்திரம் சூட்டிய குற்றமும் உண் டாம். அவ்வாறன்றி முல்லைப் பொருளுக்கு நடுவே எங்கே னும் ஓரிடத்தில் பொருத்தமின்றி அவ்வஞ்சிப்பொருளை மாட்டிவிடினுங் கற்போர் உணர் வு சலிப்படையுமாகலின் அதுவுங்குற்றமேயாகும். இனி இக்குற்றமெல்லாம் அணுகா மல் இணங்கப்பொருத்துமிடந்தான் யாதோ வெனிற் கூறு தும். எடுத்துச் சொல்லப்படுகின்ற முதன்மைப்பொருள் முற்றும் முடிவுபெறாமற் காற்பங்கோ அல்லது அரைப்பங்கோ சிறிது கருக்கொண்டு ஓரிடத்தில் கூடி நின்று கற்பார்க்கு,