பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ0 முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப் புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவை என்று கூறுதலோடு நப்பூதனார் கூறுவதையும் ஒப்பிட்டு உணர்க. வாடைக்காலத்தும் வேனிற்காலத்தும் அரசர்கள் போர் மேற்சென்று பாசறைக்கண் இருப்பது பண்டைக்காலத் தமிழ் நாட்டு வழக்கு என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதல் லின், வேனிற்காலத்துப் போர் மேற்சென்ற தலைவன் திரும்பி மனையாள்பால் வந்துசேர்தற்குரிய கார்காலத் துவக்கத் திலே பிரிவாற்றியிருந்த தலைவியின் முல்லை யொழுக்கத்தைப் பொருளாக வைத்து நப்பூ ஈசனார் இம்முல்லைப்பாட்டியற்றினார். திரும்பவுங் கூதிர்காலத் துவக்கத்திலே நெடுஞ் செழியன் தன் மலை யாளைப்பிரிந்து போர் மேற்செல்லத் தலைமகள் பிரிவாற் றாது வருந்திய பாலை யென்னும் அகப்பொருள் ஒழுக்கத் தைப் பொருளாக வைத்து நக்கீரனார் நெடுநல்வாடை இயற்றி னாரென்று பகுத்தறிந்து கொள்க. வேனிற்காலத்திற் பெரும் போர் துவங்கி நடைபெறுகையில் வேனில் கழிந்து கார்ப்பரு வச் தோன்றியதாக இருபடைமக்களும் அப்பருவங் கழியுந் துணையும் போர் விட்டிருந்து, மறித்துங் கூதிர்ப்பருவத்தொ டக்கத்திலே போர் துவங்குவராகலின், அக்கார்ப் பருவத்திலே அரசர் தம்மனைக்கு மீண்டுவந்து தங்கிப் பின்னருங் கூதிர்ப் பருவத்திலே போரைநச்சிப் போவது இயற்கையாம் என்க. இனி நெடுஞ்செழியன் தமிழில் வல்லவன், சிறந்த கொ டையாளி, அஞ்சாத போராண்மை வாய்ந்தவன் என்பது புற நானூற்றில் அவன் பாடிய ' நகுதக்கனரே என்னுஞ்செய் யுளால் இனிது விளங்கலானும், தமிழ்ப்புலவர் பலரைச் சேர்த் துவைத்துத் தமிழை வளம்படுத்துவந்தான் என்பது மதுரைக் காஞ்சி முதலியற்றால் தெரிதலானும் இவனையும் இவன் கற் புடைமனைவியையுஞ்சிறப்பித்துப் புலவர் பலர் பாடினாரென் பது துணிபு. அற்றேல், இதில் அவ்வரசன் பெயர் சொல்லப் படாமை என்னையெனின்; அகப்பொருளொழுக்கம் பயின்று.