பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. செல்வவளம் வாய்த்தோர் அங்கு மாளிகை அமைத்து அதில் வாழ்தல் வழக்கம். உச முதல் எக-வது வரிகாறுங் காண்க. இனித்தலைமகளைப்பிரிந்து வினைமுடிக்கப்போன தலை மகன் இருக்கும் இடம்: பகைவர் நகரத்தைச் சூழ்ந்து அரணா யிருக்கும் முல்லைக்காட்டிற் பாடிவீடு என்க முற்கால இயற் கைப்படி அரசர் தம் நகரத்திற்குக் காவலாக மதில் அகழி, பாலை வெளி முதலியவற்றை அரணாக அமைத்தலேயன்றி அவற்றிற் கும்புறத்தே அடர்ந்த காடுகளையும் காவலரணாக வைப்பர் இவ் வாறு சமைக்கப்பட்ட பகைவாது காட்டிற்சென்று பாட் டுடைத் தலைவன் பாசறையிலிருக்கும் இருப்புச் சொல்லப்படு கின்றது. செய்யுட் பொருள் நிகழுங்காலம். நி - சு வரிகளைக் காண்க. இனித்தலைமகள் முல்லை நிலத்து மாளிகையில் இருக் குங்காலம் கார்காலத்தில் மாலைப்பொழுது என்க. கார்கா லத்து 'மழைபொ ழிந்த முல்லைக் கானம் மரங்கொடி செடி களில் இலைகள் நீரைத் துளிப்பப், பறவைகள் ஆணும் பெண் ணுமாய் இன்பம் நுகர்ந்து கூடுகளில் ஒடுங்கிக் கிடப்ப, வானத் தில் கரிய முகில்கள் பாலி எங்கும் மப்பும் மந்தாரமுமாய் இருப்ப, அதனோடு மங்கல் மாலையுஞ் சேர்ந்து மழைகாலத் தின் இயல்பை மிகுதிப்படுத்தத் தோன்றும்போது தனிய ளாய் இருக்குந் தலைவிக்கு ஆற்றாமை மிகுதலும், கணவன் சொற்றவறாமல் அவள் அதனைப் பொறுத்து இருத்தலும், அங்கனம் இருப்போளுக்குக் கழிபேர் உவகை தோன்றத் தலைவன் மீண்டுவருதலும் போல்வன எல்லாம் இசைவாய் நடைபெறுவதற்கு இக்காலம் பெரிதும் ஏற்புடைத்தாதல் காண்க.