பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் வரலாறு, No-வது வரியைக் காண்க. இனித்தலைமகன் பாசறைவீட்டில் இருக்குங் காலம் வேனிற்காலத்து இறுதி நாளில் இடையாமம் என் க. வேனிற் காலத்துப் பகைவயிற் பிரிந்த தலைமகன் வெஞ்சுடர் வெப்பந் தீர நால்வகைப்படையும் நீரும் நிழலும் பெறும் பொருட்டுக் கான் யாறு ஓடும் (உச - வது வரி) காட்டில் தங்கிப் பகைவ ரோடு போர் இயற்றுங் காலமும் அதுவேயாம் என்க. இப் பாட்டில் அவன் பெரும்பான்மையும் போர்வினை முடித்து அவ்வேனிற் காலத்தின் கடைநாள் இரவில் பாசறையில் இருக்கும் இருப்பும், மற்றை நாள் தொடங்கும் கார்காலத்தில் அவ்வினையினை முற்றும் முடித்து இரவு கழிய வருநாள் மாலைப் பொழுதில் மீண்டு தன் தலைவிபாற் சென்றமையுஞ் சொல்லப்படுகின்றன. இப்பொருள் அறியமாட்டாத நச்சி னார்க்கினியர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் தலைவன் பாசறையிருப்புக்குங் கார்காலம் உரித்தென்று உரை கூறினார்; ஆசிரியர் தொல்காப்பியனார் கூதிர் வேனில் என்றிருபாசறைக், காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும் என்பதனால் குளிர்காலத்துப் பாசறையும் வேனிற்காலத்துப் பாசறையும் என இரண்டே உடம்படுதலானும், தலை மகட் குக் கார்ப்பருவங் குறித்து வந்த தலைமகன் அதுகண்டவள் வானே தான் எடுத்துக்கொண்ட வினை முடித்து மீளுவான் என்பது அவர்க்கும் உடம்பாடாதலானும், இச்செய்யுள் செய் கின்ற நப்பூதனார்க்கும் அதுவே கருத்தாகலானும், போர்வி னைக்கு மிகவும் இடையூறு பயப்பதான கார்காலத்தில் இரு படைமக்களும் போர் விட்டிருத்தலே உலக வியற்கையாதலா னும் அவர் பாசறை யிருப்பிற்குக் கார்காலமும் உரியதென் றது பொருந்தா தென மறுக்க. எடுத்தவினை முடியாதா யின் அதனை இடைப்பட்ட கார்காலத்தில் விட்டிருந்து, திரும்பவுங் கூதிர்காலத்தே அதனைத் துவங்கி நிகழ்த்துவர் - என்றறிக.