பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நப்பூதனார்
இயற்றிய
முல்லைப் பாட்டு,


நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல் நிமிர்ந்த மாஅல் போலப்
பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு

(௫)கோடு கொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி

பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
யருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை

(௰)யரும்பவி ழலரி தூஉய்க்கை தொழுது

பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி
ஏறுதுய ரலமர னோக்கி யாய்மக
ணடுங்கு சுவ லசைத்த கையள் கைய

(௰௫)கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தா

வின்னே வருகுவர் தாய ரென்போ
ணன்னர் நன் மொழி கேட்டன மதனா
னல்ல நல்லோர் வாய்ப்புட் டெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து

(௨௰) வருத றலைவர் வாய்வது நீநின்

பருவா லெவ்வங் களை மா யோ யெனக்
காட்டவுங் காட்டவுங் காணாள் கலுழ்சிறந்து
பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்பக்
கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற்

(௨௫) சேணாறு பிடவமொடு பைம்புத பெருக்கி