பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. பொருட்டாகுபாடு. க-முதல் சு.வரிகள். கார்கால வருணனை. கார்காலம் இப்போது தான் தொடங்கியதாகலின் கரிய மேகம் மிகவும் நீரைப் பொழிந்தது. பெரும்பெயல்' என் பது கார்காலத் தொடக்கத்தில் பெய்யும் முதற் பெயல், இதனைத் 'தலைப்பெயல்' என்றுஞ் சொல்லுவர். இங்ஙனம் முதற் பெயல் பொழிந்து விட்ட நாளின் மாலைக்காலம் முத விற் சொல்லப்பட்டது. தலைவன் குறித்துப்போன கார்ப் பருவம் வந்தது என்பதனை அறிந்த தலைவி அவன் வரு கையை நினைந்து மயங்கி இருத்தலும், அவ்வாறு இருப்போள் மயக்கந் தீர அவன் மீண்டு வருதலும் இப்பாட்டின்கட் சொல்லப்படுதலின் அவற்றிற்கு இசைந்த கார்ப்பருவ மாலைப் பொழுதை முதலிற் கூறினார் என்றறிக. எ-முதல் உச.வரிகள். தலைமகள் தனிமையும் அவளது பிரிவாற்றாமையும். வேனிற்காலத் தொடக்கத்திலே தன் காதலன் பகைவயிற் பிரியப்போகின்றான் சொன்னவண்ணங் கார்ப்பருவம் வந் தும் அவன் வந்திலாமையின் தலைமகள் பெரிதும் ஆற்றாளா கின்றாள். அதுகண்டு ஆண்டின் முதிர்ந்த பெண்டிர் அவளை ஆற்றுவிக்கும் பொருட்டுத் தம் ஊர்ப்பக்கத்தேயுள்ள மாயோன் கோயிலிற் போய் நெல்லும் மணங்கமழும் முல்லைப்பூவுக் தூவி வணங்கி நற்சொற் கேட்ப நின்றார்; நிற்ப, அங்கே அருகாமையிலிருந்த மாட்டுக் கொட்டிலில் நின்ற ஓர் இடைப் பெண், புல்மேயப்போன தாய் இன்னும் வாராமையாற் சுழன்று சுழன்று வருந்துகின்ற ஆன் கன்றுகளைப் பார்த்து 'நீங்கள் வருந்தாதீர்கள், உங்கள் தாய்மார் கோவலரால் ஓட் டப்பட்டு இப்பொழுதே வந்துவிடுவர்' என்று சொல்லிய நற் சொல்லை அம்முது பெண்டிர் கேட்டு வந்து, அன் னாய்! யாங்கள் கேட்டுவந்த இந் நற்சொல்லானும், நின் காதலன் போகுந்தறுவாயில் அவன் படைவீரர் பாக்கத்திலே கேட்டு