பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. ளுக்கு இடையில் தலை மகனுக்கு ஒரு தனி வீடு சமைக்கப் பட்டமையுங் கூறுகின்றார். வலியவில்லை நிலத்திற் சுற்றி லும் ஊன்றி, அம்புப் புட்டிலை அதில் தொங்கவிட்டுப், பின் அவ்விற்களையெல்லாங் கயிற்றால் தொடுத்துக்கட்டி வளைத் துச்செய்த இருக்கையில், நீண்ட குந்தங்கோல்களை pvரன் றி அவற்றின்பாற் படல்களை நிரைத்துச் செய்த வில்ல ரணங்களே சுற்றுக்காவலாக அவற்றின்கண் உள்ள பல வேறு படைகளின் நடுவிலே, தலைவனுக்கென்று பல நிற முடைய மதிள் திரையை வளைத்துச்செய்த வீட்டின் அமைப் புக் கூறினார். அதன்பின் அங்ஙனம் வகுக்கப்பட்ட தலைமக னிருக்கையில் அழகிய மங்கை பருவத் திளைய பெண்கள் சச் சிலே கட்டப்பட்ட திண்ணியவாளினை உடையாாய் நெய் யைக் கக்குகின்ற திரிக்குழாயினாலே குறையும் தோறும் திரி யைக் கொளுத்தி எரித்தவண்ணமாய்த் தங்கையில் விளக்கு ஏந்திக்கொண்டு நிற்கின்றார்கள் : குதிரை முதலியன உறங் குதலின் அவற்றின் கழுத்திலே கட்டப்பட்ட மணியின் ஓசையும் அடங்கிப்போன ந டு யாமத்தில் மெய்காப்பாளர் தூக்க மயக்கத்தால் அசைந்து அசைந்து காவலாகச் சுற் றித் திரிகின்றார்கள்; இங்கனம் நடுயாமம் ஆதலும், பொ ழுது அளந்தறியோர் தலைவன் எதிரே வந்து நின்று வணங்கி வாழ்த்திக் கடாரத்து நீரிலேயிட்ட நாழிகை வட்டிலாற் பொ ழுது இவ்வளவாயிற்றென்று அறிவிக்கின்றார்கள்; அதனைக் கேட்டவுடன் அரசன் எழுந்து, யவனர்களாலே புலிச்சங்கிலி விட்டு அழ சிதாக நியமிக்கப்பட்ட இல்லின் உள்ளே விளக் கங்காட்டப்படச் சென்று, வலிய கயிற்றால் இடையிலே திரை யை மறித்து வளையக் கட்டி முன் ஒன்றும் பின் ஒன்றுமாய் இரண்டாக வகுக்கப்பட்ட பள்ளி அறையிற்போய்ப் படுக்கை யில் அமர்ந்திருக்கின்றான்; அங்ஙனந் தலைவன் பள்ளிகொள் ளும் உள்ளறையின் முன் திரைக்குப் புறத்தேயுள்ள வெளி யறையிலே சட்டையிட்ட மிலேச்சரில் அமைகள் தலைவன் பள்ளியறையைச் சூழ்ந்து இருக்கின்றார்கள்; அரசனோ நா