பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பாதபாடு. ளைக்குச் செய்யவேண்டும் போரினை மிக விரும்பி அதனாற் படுக்கையில் உறக்கங் கொள்ளானாய் முன் நாட்களில் நடந்த போரிற் புண்பட்ட யானைகளை நினைந்தும், யானையை வெட் டியும் தமக்கு வெற்றியினை யுண்டாக்கியும் இறந்துபோன போர்வீரரை நினைந்தும், அம்பு அழுந்திய வருத்தத்தால் தீனி கொள்ளாமல் காதைச் சாய்த்துக்கொண்டு கலங்குங் குதிரைகளை நினைந்தும் மிகுந்த இரக்கம் உடையோனாய் ஒரு கையை அமளி மேல் வைத்து ஒரு கையினால் முடியைத் தாங்கி இவ்வாறு நீள நினைந்து இருக்கின்றான். எஉ - முதல் அய-வரையில். தலைவனது வெற்றியும், அவன் பாசறையில் இனிது உறங்குதலும். இனி இவ்வாறு முன்னாளிரவு உறக்கமின்றிக் கவலை யோடிருந்த தலைமகன் பின்னாளிற் பகைவரையெல்லாம் வெற்றி கண்டு, தன் வலிய விரலாலே நல்ல வாகைமாலையி னைச் சூடிக்கொண்டு, 'நாளை மாலையில் தலைவியைக் காண் போம்' என்னும் மகிழ்ச்சியினால் ஒரு கவலையுமின்றிப் பகை யாசர் கேட்டு நடுங்குதற்குக் காரணமான வெற்றி முரசு முழங்கும் தன் பாசறைவீட்டில் இனிது துயில் கொண்டி ருக்கின்றான். அய்-முதல் அ அ -வரையில். பாட்டின் பொருட்காட்சி துயரமும் தேறுதலுங் கலந்த நிலையிற் படுத்துக் கிடக்கும் தலைமகளில் முல்லைக்காட்டு யாளி கைக்குத் திரும்பவும் மாறுகின்றது. இனி இங்ஙனம் பாசறையில் இனிய உறக்கத்திலே கிடக்கின்ற தலைமகனைத் தன் பக்கத்திலே காணாத தலைமகள் அவனிடத்தே தன் நெஞ்சினைப் போக்கி மிக வருந்தும் வருத் தத்தால், முதுபெண்டிர் நற்சொற்கேட்டு வந்து ஆற்றுவிக் குஞ் சொற்களையுங் கேளாமல் வருந்துகின் றவள், "இங்ஙனம் ஆற்றாமே வருந்தினால் அது நம்பெருமான் கற்பித்த சொல்