பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் பொருள் நலம் வியத்தல். சக யைத் தொங்கவிட்டிருப்பதற்குப் பார்ப்பனத் துறவி காவிக் கல்லில் தோய்த்த உடையைத் தன் திரிதண்டத்திற் றொங்க விட்டிருப்பதை உவமை கூறியது பொருத்தமாகவிருக்கின் றது. இதனால் இவ்வாசிரியர் துறவிகளிடத்துப் பழக்கமுடை யார் என்பதும், துறவொழுக்கத்தில் வேட்கையுடையாரென் பதும் குறிப்பாக அறியப்படும். மெய்காப்பாளர் பாடி வீட்டில் இடையாமத்திலே தூக் கமயக்கத்தோடும் அசைந்து திரிதல் பூத்த புனலிக்கொடி படர்ந்த தூறு வாடைக்காற்றில் அசைவது போல் இருக்கின் றது என்பதனாலும், காயாமலர் கறுப்பாகவும், கொன்றை பொன்னிறமாகவும், தோன்றி சிவப்பாகவும் இருக்கும் என் பதனாலும், வரகங் கொல்லையில் மான்கள் தாவிக் குதிக்கின் றன, கார்காலத்தில் வள்ளிக்கிழங்கு முற்றிவிடுகின்றன என் பதனாலும் இவர் இயற்கைப் பொருள்களைக் கண்டறிவதி னும், அவற்றைத்தா - கண்டவாறே சொல்வதினும் திறமை மிக்குடையரென்பது இனிது விளங்கும். இன்னும் முது பெண்டிர் நற்சொற்கேட்கும் பொருட்டு ஊர்ப்பக்கத்தே திருமால் கோயிலிற் போய் நாழி. நெல்லும் முல்லையும் தூவி வணங்குதலும், குளிர் மிகுதியால் தோளிற் கட்டிய கையுடன் நற் தம் ஓர் இடைப்பெண் ஆன்கன்று கட்குத் தேறுதல் சொல்லுதலும், காட்டிலே பாடிவீடு அமைத் தலும், அப்பாடி வீட்டினுள் நாற்சந்திகூடும் முற்றத்திலே யானைப்பாகர் யானையைக் குத்திக் கவளம் ஊட்டுதலும், வில்லினால் வளைவா 5 அமைக்கப்பட்ட கூடாரங்களுக்கு இடையிலே அரசனுக்கென்று வண்ணத்திரையினால் வேறோர் வீடு செய்யப்பட்டிருத்தலும், அவ்வீட்டின் உள்ளே பெண் கள் பலர் கையில் விளக்கு ஏந்தி நிற்றலும், குதிரை முதலிய வற்றின் கழுத்திற் கட்டிய மணியோசை நடு இரவில் அடங்கி விட்டதும், மெய்காப்பாளர் அரசனிருக்கையைச் சுற்றிக் காவலாகத் திரிசலும், பொழுதறிவோர் கொப்பரை நீரில்