பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. வேறாகத் தலைவி ஆற்றாமல் வருந்தினாள் என்றல் நெய்தல் என்னும் இரங்கல் ஒழுக்கமாம் ஆகலின், இவ்விரங்கல் ஒழுக் கம் போ தரப் பொருளுரைத்தல் நாலாசிரியர் கருத்தொழா ணுமாகலின் இப்பாட்டுக்கு நேரே பொருள் கூறு தலாகாது.' என்று சொல்லிப் பொற்சரிகை பின்னிய நற்பட்டாடையி ளைத் துண்டு துண்டாகக் கிழித்துச் சேர்த்துத்தைத்து அவம் படுவார் போல, செய்யுட் சொற்றொடர்களை ஒரு முறையு மின்றித் துணித்துத் துணித்துத் தாம் வேண்டி வாறு பின்னி உரை வரைகின்றார். இனி அவர் நிகழ்த்திய தடையினிப் பரிகரித்துரைக் கின்றாம். வேனிற்காலத் தொடக்கத்தில் தலைவன் தான் பிரி யும்போது 'யான் கார்காலந் தவங்குதலும் மீண்டுவந்து உன் டைன் இருப்பேன்; என் ஆருயிர்ப்பாவாய்! நீ அது காறும் நம் பிரிவாற்றாமையால் நிகழுந் துயரைப் பொறுத்திருத்தல் வேண்டும்' என்று கற்பித்த வண்ணமே ஆற்றியிருந்த தலை மகள் அவன் குறித்த கார்ப்பருவம் வரக்கண்டும் அவன் வந் திலாமையிற் பெரிதும் ஆற்றாளாயினாள்; இஃதுலக இயற்கை. இங்ஙனம் ஆற்றாளாகின்றமை கண்ட பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டுவந்து வற்புறுப்பவும் ஆற்றா துவருந் துந் தலைவி பின் 'நாம் இங்ஙனம் ஆற்றாமை வருந்துகின்றது கண வன் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியும்' என்று நெடுக நினைந்து பார்த்த 'அவர் வருந்துணையும் நாம் ஆற்று தலே செயற்பாலது' என்று தன்னைத் தேற்றிக் கொண்டு கிடந்தாள் என்பது அஉ -வது வரி முதல் நன் கெடுத்துக் கடற்ப்படுதலின், இப்பாட்டின் கண் முல்லை யொழுக்கமே விளக்கமாகச் சொல் லப்பட்ட தென்பது அறிவுடை யார்க் கெல்லாம் இனிது ண ரக்கிடந்தது. அற்றன்று, முல்லை யொழுக்கமே பயின்று வருகின்ற இப்பாட்டின்கட் 'பூப்போல் உண் கண் புலம்பு முத்துறைப்ப" என்னும் இரங்கற்குரிய அழுகையினைக் கூறு தல் பொருந்தா தாம் பிறவெனின்; நன்று கடாயினாய், முன் னும் பின்னுமெல்லாம் முல்லை யொழுக்கமே தொடர்புற்று