பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. பட்ட நிறத்தினையுடைய திசையை உணர்த்தியது ஆகுபெய பால். (சுரு-சக) வாளினைத் தமது கக்சிலே சேரக்கட்டின மங் சையர் தங்கையிலே விளக்கு ஏந்தி, அது குறையும் ேதாறுந் திரிக்குழாயினால் அதனைக் கொளுத்த என்க. இதற்கு இவ்வாறன்றி மங்கையர் கையிலுள்ள விளக்கி னைத் திரிக்குழாயையுடைய சிற்றாட்கள் கொளுத்த என்று ரைப்பின் 'மங்கையர்' என்னுஞ்சொல் தழுவும் வினையின்றி நின் றுவற்றுமாகலின் அப்பொருள் பொருந்தா தென்க. தொடி - கைவளை; இப்பொருட்டாதல் கங்கணங் கை வாை யொருபலந் தொடியே" என்னும் பிங்கலந்தையிற் காண்க. புறம் - முதுகு. இரவைப் பகலாக்கும் வலியபிடி யமைந்த ஒளியுள்ளவாள். விரவு - சேர்ந்த. வரிக்கச்சு - வரிந்து கட்டப்பட்ட இரவிக்கை, குறுந்தொடி யணிந்த முன் கையி னையும் கூந்தலசைந்து கிடக்குஞ் சிறு புறத்தினையு முடைய மங்கையர், வாள் விரவ வரிந்து கட்டின கச்சை யணிந்த மங் கையர், என அடைமொழிகளை இருகாற் பிரித்துக் கூட்டுக . சுரை - திரிக்குழாய். நந்துதொறும் - குறையும் ேதாறும். (ருயருச) மணியினோசையும் அடங்கிய நள்ளிரவில், அசையும் புனலிக்கொடி யேறிய சிறு தூ றுகள் துவலையோடு வந்து அசையுங் காற்றினால் அசைந்தாற்போலத் தூக்க மயக் கத்தால் அசைதலையுடைய மெய்காப்பாளர் காவலாகச் சுற் றித் திரிய வென்க. நெடுநா வெண்மணி - நீண்ட நாக்கினை யுடைய வெள் ளியமணி. நிறுத்திய - நுணுகிய; அதாவது முன்னுள்ள ஓசை அடங்கிய; இச்சொல் நுணுக்கப்பொருளை யுணர்த்துதல் ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவயின் நான்கும் நுணுக்கப்பொருள என்னும் தொல்காப்பிய உரியியற் சூத் திரத் திற் காண்க; என்றது குதிரை யானை என்றற் றொடக் கத்தனவும் 2. றங்குதலின் அவற்றின் கழுத்திற் கட்டிய மணி