பக்கம்:முல்லை கதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10s குந்தியின் பாவம், திரெளபதியின் காதல். அர்ஜுன னின் கர்வம், தருமனின் மடமை, துரியனின் கயமை, எல்லாம் கர்ணன் மரணத்தோடு மாயவேண்டியதுதான். கீதை உபதேசத்தைப் பெற்றவன் அர்ஜுனன் த ான் ஆனால் கீதா போதனையின் கண்கண்ட சாதனைச் சாட்சி இந்தக் குருrேத்திரம்! குருrேத்திரத்தில் விளையாடியவர்கள் எல்லோரும் என்னுள் அடங்கியவர்கள். நானே ஆட்டுவித்தேன். நானே ஒடினேன். கொன்றவனும் நான், கொல்லப்பட்டவனும் நான் இதுதான் என் அலகிலா விளையாட்டு! அர்ஜுனன்: கர்ணன் என் அண்ணன்; என் எதிரி. இந்த உணர்ச்சியை என்னால் லகுவில் ஒதுக்கிவிட முடியவில்லை. காரண காரியங்களுக்கு மூலமான கண்ணனின் விளையாட்டு என்று மானசீக பக்குவத்தோடு கர்ணனின் மரணத்தை விலக்கி விடவும் முடியவில்லை. கர்ணன் என் எதிரி. இளமை முதல் அவனைப் பகைத்தே வந்திருக்கிறேன் இருவர் கையிலும் வில்லேறிய நாளி லி ரு ந் து ஒருவருக்கொருவர் விரோதிதான். இன்று நான் கர்ணனைக் கொன்றுவிட்டேன். எனினும் அவனை நான் வென்றதாகவே எண்ண முடியவில்லை. கர்ணனின் மரணத்துக்காக இந்திரனும் கண்ணனும் அவனிடம் பிச்சை ஏற்க வேண்டியிருந்தது. தான் பெற்ற பிள்ள்ையிடம் தாய்மையுணர்ச்சியைக் காட்டி ஏமாற்றி, நாகாஸ்திரப் பிரயோகத்துக்கு தடைவிதிக்க வேண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/111&oldid=881447" இலிருந்து மீள்விக்கப்பட்டது