பக்கம்:முல்லை கதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரவான் லா. சா. ராமாமிர்தம் அன்று அச்சுனன் புத்திரன் அாவான் பாத புத்தத் துக்கு முதற்பலியானான். இன்றுநமது வாழ்க்கை மலர்ந்த சோலையல்ல, மகா மசானம்! குருகேத்திரம் இந்த வாழ்க்கைப் போரில் ஒரு அரவான பலி யாகிறான்? குழந்தையின் வீறலைக் கேட்டு, கிணற்றின் பிடிச் சுவற்றின்மேல் தவலையுடன் தாம்புக்கயிற்றை அப்படியே போட்டுவிட்டு, உள்ளே ஓடிவந்து குழந்தையை வாரி னான். பொங்கி வழியும் வியர்லை. மூலவர்மேல் பூசிய எண்ணெய்போல் அவன் கறுப்புடல்மேல் பளபளத்தது. அவனுடைய பரந்த கைகளினிடையில்,குழந்தை சின்ன மாவுப் பொம்மைபோல்தானிருந்தது. இழுத்துப் பழக்க மில்லாததால், தாம்புக்கயிறு உள்ளங்கைகளை வீறுவீறாய் அறுத்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/115&oldid=881451" இலிருந்து மீள்விக்கப்பட்டது