பக்கம்:முல்லை கதைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 -அதுக்குள்ளே நீ தானே என்மேல் கண்ணேப் போட்டே! . -நீ மாத்திரம் சும்மாயிருந்தையா? அடிக்கடி கடைக்கு வந்து கட்டைப் புகையிலே கடிச்சுக்க ஒரு துண்டு கொடுன்னு என் கையை இடிச்சு இடிச்சு வாங்கிப் போனையே. மறந்துபோச்சா? -ஒத்தரை யொத்தர் ஏன் குத்தம் சொல்லனும்? ஏமாந்து போனோம் அவ்வளவுதான். -எல்லாந்தான் போச்சு. அன்னிக்கு என் னவோ சீக்கிரமாகக் க ையைக் கட்டிக்கிட்டு அன்னிக்கின்னு ரயில் டேஷனுக்குப் போற வழியிலே நான் ஏன் வரனும்? நீ கடலைக்காய் கொல்லையிலே காவல் காத்துட்டு நான் வந்த வழியே, ஏன் வரனும்: -காற்று மேட்டிலே வெக்கறத்துக்கு முத்திரை யைக் கொடுத்துட்டு வந்தேன். -வ ந் த து தா ன் வந்தையே சும்மாப் போனையா மடியிலிருந்து பிடி கடலைக்காய் எடுத்து இந்தான்னே. சிரிச்சுக்கிட்டே. நான் நினைவு மங்கிப்போய் உன் கையைப் புடிச்சேனே! கையை உதறி என் கன்னத்திலே ஏன் ஒண்ணு விட்லெ, அப்படியே என் தோள் மேலே சாஞ்சூட்டே. அன்னிக்குன்னு நிலவு ஏன் அப்படி காயனும், ஆற்றோரத்துக்கப்பால் சினிமாக் கொட்டகையிலேருந்து அம்பிகாபதிப் பாட்டு காதண்டை மோதி ஆளை ஏன் அப்படி சொக் கடிக்கனும், நான் என்னத்தைத் கண்டேன்! பிள்ளைப்பூச்சி உடனே கடிச்சுடும்னா கண்டேன்! இந்தக் புள்ளையைப் பற்றி அப்போ நெனைச்சோமா? வயித்தெ எத்தனை நாள் மறைச்சுவெக்க முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/126&oldid=881464" இலிருந்து மீள்விக்கப்பட்டது