பக்கம்:முல்லை கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சி மனப்பான்மை புதுமைப்பித்தன் அன்று என் நண்பரின் பத்திரிகை ஆபீஸிற்குப் போயிருந்தேன். அங்கே ஒர் புரட்சிக்காரர். - அசல்: "அப்படமானவர்' கொஞ்சம் கூட கலப்புக் கிடையாது... நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் மாஜிஏதோ ஒர்-சதிக்கை தி, என் நண்பர் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். நம் போன்றவர்கள் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டியவராக்கும்' என்றார் என் நண்பர். புரட்சிக்காரர். ஒய்-உமக்கு - வெள்ளையனைச் சுடத் தெரியுமாங்காணும் என்ற ஒரு பார்வை பார்த்தார்: சரி, இது தான் ஆரீமான் புரட்சியா என்று நிர்ண யித்துக்கொண்டு நாற்காலியில் உட்க்கார்ந்தேன். புரட்சிக் காரர் அணியவேண்டிய அசல் விதேசிச்சரக்கு, யாரையும் எடுத்தெரிந்து பேசும் தன்மை......சர்வ லக்ஷணமும் பொந்தியிருந்தது. சாட்சாத் புரட்சிக்காரர் தரிசனத் திற்காக, என் முன்னோர்கள் வழிபட்டுவந்த கடவுளை நான் கும்பிட்டுக் கொண்டேன். பாட்லிவாலா, பண்டார சன்னிதி, கங்காரு, 1939 மாடல் மோட்டார் கார், இரட்டைப் பெண்கள், சினிமா ஸ்டார் காந்தாமணிபாய், உயர் திரு. தேசபக்தர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/18&oldid=881498" இலிருந்து மீள்விக்கப்பட்டது