பக்கம்:முல்லை கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பாண்ட், கோட் இல்லாமல் ஒரு ட்ரெளஸர் மட்டும் அணிந்து கொண்டு அந்த உருவம் கிடந்தது. வலது கையும், வலது காலும் இருக்கவேண்டிய இடங்கள் காலி: மார் பின் வலப்பாகம் சரிந்திருந்தது. எல்லாவற்றிலும் கோரம் அந்த உருவத்திற்கு முக்கே இல்லை! நான் முதலில் பார்த்த பொம்மை அழகுக்குப் பதிலாகப் பயங்கரமான-அல்ல; அசிங்கம், சே, அசிங்க மான உருவம்... நினைப்பில் தடுமாறி என் கால் ஒன்று கீழே சாய்ந்து சப்தம் எழுந்தது. "யாரது' என்றது உருவம், குயிலொத்த குரல். நிர்ப்பந்தத்தால் கீழே இறங்கினேன். உருவம் கண் களையும் திறந்துவிட்டது, வலது கண் இருக்கவேண்டிய ஸ்தானத்திலிருந்து ஒரு பள்ளம் முறைத்தது; அங்கே கருவிழி, ஒன்றுமே இல்லை? மொத்தத்தில் அந்த உருவம், மனிதவுடலில் இடது பாதியாகத் தோன்றியது. "யார் நீ?" அதுவும் பயந்துள்ளது என்று அதன் குரலும், இடது கண்ணும் சாட்சி சொல்லின. "நானா?...நான்...' என்று குழறினேன். "நீ எப்படி இந்த வண்டியில் வந்தாய்?" அந்த வெள்ளை அரை உடல் தன் இடது கையை ஊன்றி எழுந்திருக்க முயன்றது; முடி யாமல், கீழே தொப்பென்று சாய்ந்தது; மீண்டும் சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்து விட்டது. "இது ரிஸர்ல் வண்டி என்று உனக்குத் தெரியாதா: கறுப்பு நாயே, உனக்கு புத்தி இல்லையா?" கடவுளே! உனக்கு (கடவுளுக்கு அல்ல, உனக்கு) இந்தமாதிரி அனுபவம் ஏற்படவே கூடாது. எமனுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/45&oldid=881557" இலிருந்து மீள்விக்கப்பட்டது