பக்கம்:முல்லை கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. வண்டிக்காரன் மாட்டைத் தட்டிக் கொடுத்தான். ஆவுடைநாயகம் வண்டிக்குள் ஏறிக் கொண்டான். வண்டி ஜல் ஜல் என்ற சதங்கை ஒலியோடு யூனியன் லாத்தல் வெளிச்சத்தைத் தாண்டி ஆலங்குளம் சாலைக்குப் போகிற செம்மண் தடத்து இருளில் மறைந்தது. சற்று நேரம் அதைப் பார்த்துக் கொண்டிருத்தார். பிறகு வீட்டுக்குள் நுழைந்தார். "வைத்தியரைக் கூப்பிடப் போனவன் வந்திட்டானா?” என்று மைத்துனரைக் கேட்டார். 'இல்லை' என்றார் மைத்துனர். சாயங்காலம் நாடி எப்படி இருந்ததாம்: "தோஷம் இருக்கும் என்றுதான் சொன்னாரு. ரெண்டுநாள் கழிச்சாத்தான் அக்கா பொழைக்கிறது தெசம் இலண்ணாரு' பிள்ளைக்குத் தலை சுற்றியது. "பிரசல பஹீனம், வேறு ஒன்று மில்லை' என்று தான் முதலில் நினைத்தது தவறு என்று தெரிந்தது. ஆறு மாசமாப்படுத்த படுக்கிையிாக் கிடத்த உடம்பு இம்புட்டா வது புெலம் இருந்ததே குறையும் சாலைக் குமாரசாமி தான் காப்பாத்தனும், தாம்பலா நெனச்சா ஒண் னொண்ணை செய்கிறோம்' என்றார். "ஆவுடைநாயகம் எங்கே வந்திட்டுப் போறான்?” "ஆவுடை நாயகமா?.....ஒரு ஐஞ்னுாறு கைமாத்துக் கேட்டான். அவசர காரியம், நாளைச் சாயங்காலம் வாங்கிக்கிடுங்க அப்படின்ன்ான். குடுத்தனுப்பினேன்.” "ஓங்க கையிலே ஐஞ்ஞாறுதான் இருக்குன்னு. சொன்னிகளே வீட்டிலே இப்பிடி இருக்கிறபோது, கையிலே இருக்கிறதைத் தூக்கிக் குடுத்துட்டா, அவசரத் துக்கு என்ன செய்கிறது? எங்கிட்டயும் காத்துட்டு இல்லை. அட, ஒரு லாபத்தைப்போல் நஷ்டமின்னா......'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/60&oldid=881591" இலிருந்து மீள்விக்கப்பட்டது