பக்கம்:முல்லை கதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 தாவது ஒரு வார்த்தை பேசிவிட்டால்...அதையே நினைந்து நினைந்து இதயம் கிளுகிளுப்பேன்...” சற்று ஆயாசத்துடன் பெருமூச்சு விட்டாள் ரூபி. பிறகு மீண்டும் தொடர்ந்து, ஒருநாள் இரவு அவர் என்னை நெருங்கினார். நான் சற்று பிகு பண்ணினேன்... பிறகு என்னைத் தழுவி... முத்தமிட்டார். கனவில்தான்! - திடுக்கிட்டு விழித்தேன். இன்ப உண்ர்வில் திளைத்த நினைவு மட்டும் அகலவில்லை. கேவலம் என் தலையணை. தான் என் அணைப்பின் சுகத்தை அனுபவித்துக் கொண்டி ருத்தது. வெட்கமும், சிரிப்பும் ஏமாற்றமும் என்னைப் பற்றி உலுக்கின. தலையணையை வீசி யெறிந்துவிட்டு, என்னை யறியாமல் கலகலவென்று சிரித்தேன். பிறகுதான் ... யாராவது விழித்துக்கொண்டிருந்தால்... என்று எண்ணியவளாய் தலைமாட்டிலிருந்த 'டார்ச்சை' எடுத்து மெதுவாகக் கவனித்தேன். என் தங்கையும் தம்பி யும் நன்றர்கத் துரங்கிக் கொண்டிருந்தனர். அடுத்த படுக்கை... காவியாகயிருந்தது. அம்மா...? ஒரு சமயம் வெளியே போயிருக்கலாம்...நல்ல வேளை? ஆனால்... அவர் விழித்திருந்தால் விடிந்ததும் கிண்டல் செய்து என் மானத்தை வாங்கி விடுவாரே...என்று அவர் இருந்த அதைப்புறமாக லேசாக டார்ச்சைத் திருப்பினேன். என் இதயம் படபடத்தது..கைகால் வெலவெலத்தது...உல கமே நழுவி எங்கேயோ உருளுவதுபோல இருந்தது. ஏதோ ஒருவிதமான பீதி ஏற்பட்டது. மனசில் வெறி ஏற் பட்டது...இன்னது செய்வதென்று தெரியாமல். அலறி விட்டேன்.'" இப்பொழுதும் அவள் கன்னங்களில் கண்ணிர் பொல பொல வென்று வழிந்தது. தொண்டை அடைத்துக் கொண்டது. மார்பு விம்மியது. எனக்கும் ஒன்றும் தோன் றாமல் அவளை இறுகத் தழுவிக்கொண்டு அவள் முகத் தையே ஆதரவோடு பார்த்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/87&oldid=881649" இலிருந்து மீள்விக்கப்பட்டது