பக்கம்:முல்லை கதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 "நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லையா? என் அருமை அம்மா...அவருடன்...' என்று விக்கி விக்கி அழு தாள். விஷயம் புரிந்துவிட்டது. ஆனால் அவளுக்கு ஆறுதல் சொல்லும் வகைதான் புரியவில்லை. சற்று நேரம் மெளன மாக உட்கார்ந்திருந்தோம். அவள் வாழ்க்கை கசந்து வெறுப்புற்றதில் வியப் பொன்றுமில்லை. அவள் அம்மாவை எனக்குத் தெரியும், நல்ல அழகி. கட்டு விடாத தேக வனப்பு, தாயும் மகளும் வெளியே புறப்பட்டால் அக்கா-தங்கை என்றுதான் யாரும் நினைப்பார்கள். ரூபியின் தந்தையும் சில வருஷங். களாக மலேயாவில் தங்கிவிட்டார். ஆகவே-! என்ன தான் இருந்தாலும்............... 率 * 事 "இனி உன் வருங்கால வாழ்க்கை?' என்று ஆரம் பித்தேன். வாழ்க்கை அழகான வார்த்தை லட்சியவாதிகள் கனவு காண்பதற்குத் தகுந்த பதம்தான். ஆனால்,-நெருங்: கிப் பார்த்தால்... "உன் கடந்த கால கசந்த அனுபவத்தை நினைவிற். கொண்டு பிடிவாதமாக உன் இளம் பிராயத்து இன்ப அனுபவங்களை இழப்பது இயற்கைக்கே மாறானது, மேலும் இறுதியில் அதற்காக உன்னையே நொந்து கொள்ளவும் நேரிடும்...' 'இன்பம் கனவில்தான். நனவில் அது நிதர்சனமாக நழுவிக் கொண்டிருப்பதைத்தான் நிதர்சனமாகக் காண்கிறேன். நீங்கள் 'இன்பத்தில் வெடித்த அரும்புகள்' என்று குலவிவிட்டு பிறகு, சனியன் தொலையட்டும் பள்ளிக்கூடத்திற்கு. சற்று நேரமாவது அக்கடா வென்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/88&oldid=881651" இலிருந்து மீள்விக்கப்பட்டது