பக்கம்:முல்லை கதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஏமாற்றிக்கொள்ளத்தான் வேண்டுமா? இந்நிலையில் நான் யாரை நம்பி ஆற்றில் இறங்குவது?', 'மற்றவர்களை நம்பவேண்டாம், ஆனால் உன்னி டமே தளராத தன்னம்பிக்கை வேண்டும். வாழ்க்கையில் நம்பிக்கை வேண்டும். மலரைக் கொய்து விடுவார்களே என்பதற்காக அது மலராமலே இருக்க முடியுமா? காய்க் காமல், கனியாமல் இருப்பதுதான் சாத்தியமா? நரியும் புலியும் மலிந்து கிடந்தாலும், மானும் மயிலும் தத்தம் வாழ்க்கையை வாழத்தானே வேண்டும். அலை ஒய்ந்தபின் கடல் ஸ்நானம் செய்வதென்றால் முடியுமா? 'அப் படியானால்...? வாழ்வில் விருப்பம் வேண்டும். தீவிர பசி வேண்டும். தளராத தன்னம்பிக்கை வேண்டும்'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/90&oldid=881657" இலிருந்து மீள்விக்கப்பட்டது