பக்கம்:முல்லை கதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"வென்றிலன் என்ற போதும்" ரகுநாதன் குருக்ஷேத்திரம் மண்ணின் கொதிப்பைக் கர்ணனின் பச்சை ரத்தம் தணித்தது கர்ணன் இறந்துவிட்டான். எனினும் எத்தனை குரல்கள்? கர்ணன் என் காதலன் - திரெளபதி. கர்ணன் என் தலைமகள் - குக்தி. கர்ணன் என் அண்ணன் - தருமன். கர்ணன் என் சூத்திரக் கயிறு-கண்ணன். கர்ணன் தியாகி - அர்ச்சுனன். 1 பாடி விட்டின் திட்டி வாசல் நிலை தட்டி வளைந்து திமிர்ந்த வில்லின் நாண் வீறாப்புடன் நாத ஜங்காரம் செய்தது. நாணொலி கேட்ட தருமன் திடுக்கிட்டுப் போனான். பயத்தின் பீதி கம்பீரத்தில் பதுங்க எண்ணித் தவித்தது. "யாரது? கர்ணனா?' என்று வாய் விட்டுக் கேட்டு விட்டான். எனினும் கேள்வியில் விந்து விழுந்துபோயிருந் தது. கர்ணனிடம் தோற்றோடி வந்ததால் ஏற்பட்ட பயமும் பேதலிப்பும் நாக்கைக் கட்டிப் போட்டிருந்தன. மு. க.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/91&oldid=881658" இலிருந்து மீள்விக்கப்பட்டது