பக்கம்:முல்லை கதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 அந்தக் குரல் காதில் விழுந்ததும் அர்ஜுனன் திடுக் கிட்டுப் போனான். நிமிர்ந்து பார்த்தான். வாசல் நடை கடந்து உள்ளே நுழைந்த கண்ணன் அர்ஜுனன் கையை எட்டிப் பிடித்தான். 'உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?’’ என்றான் சாவதானமாக. - 'எனக்கு மட்டுமில்லை பாண்டவர்களுக்கே பைத் தியம் பிடித்துவிட்டது' என்று கத்தினான் அர்ஜுனன். தருமனின் விறைப்பையும் அர்ஜுனனின் விரக்தி யையும் கணத்தில் உணர்ந்துகொண்டான் கண்ணன். "தருமா. என்ன நடந்தது?" என்று தருமன் தோளைத் தடவிக்கொண்டே கேட்டான். தருமன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அர்ஜுனனே பதில், சொன்னான்: 'கண்ணா போதும். இந்த யுத்தம் பீமனுடைய ச ப த மும் திரெளபதியின் கூந்தலும் முடிக்கப் பெறாமலே போகட்டும். இத்தனை நிந்தனைக்குப் பிறகும் முடிக்கப் காண்டீபத்தைக் கைதொடவே கூசுகிறது' என்று கூறி விட்டு, காண்டீபத்தை விட்டெறிந்தான். தரையில் விழுந்த காண்டீபம் அடிபட்ட பாம்பைப் போலத் துள்ளி யெழுந்து படுத்தது. அர்ஜுனா என்ன இது?' என்று கூறிக்கொண்டே துவண்டு கிடந்த காண்டி பத்தைக் குனிந்து எடுத்தான் கண்ணன். பிறகு, 'தருமபுத்திரா, யுத்தத்துக்குச் செல்லு முன் உன்னிடம் ஆசி பெற்று வரும்படி அர்ஜுனனை நான்தான் அனுப்பினேன். ஆசிபெற வந்தவனிடம் இப்படியா நடந்துகொள்வது?’ என்று நயமாய்ச் சொன் னான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/95&oldid=881666" இலிருந்து மீள்விக்கப்பட்டது