பக்கம்:முல்லை கதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s 5 அர்ஜுனன் தயங்கினான். என் கடமைதான் என்ன?" என்று சலித்துக் கேட்டான். "கர்ணனைக் கொல்வது' என்றான் கண்ணன். பிறகு அர்ஜுனனைத் தட்டிக் கொடுத்து "வா புறப்படு' என்று அழைத்தான். காண் டீபத்தை அவனையுமறியாமல் அவன் கை மீண்டும் பற்றிக்கொண்டது. 'தருமா!' என்றான் கண்ணன். தருமனோ திரும்பக் கூட இல்லை. 'அர்ஜுனா உனக்கு நான்தான் சர்வமும். தருமனுக்கு இன்னும் வெறி தணியவில்லை. வா, போக லாம்' எனறு இழுத்தான் காண் டீபத்தின் கழன்றுபோன நாணை ஏற்றினான். நாணேற்றிய விசைப்பில் நரம்பு முறைத்துத் தொனித்தது. கண்ணன் அர்ஜுனனை கைப்பிடியாக இழுத்துக் கொண்டே நடந்தான். வாசல் நடை சுழிந்து வெளியில் செல்லவும் 'அர்ஜுனா!' என்ற தருமனின் குரல் காது களில் விழுந்தது. கண்ணன் சிரித்தான். அர்ஜுனன் கழுத்தைத் திருப்பக் கூட இல்லை. 2 திரெளபதி $ அரண்மனை மேன்மாட முன்றிலில் நின்று அர்த்த மற்ற வானைப் பார்த்துக் கொண்டிருத்தேன். மனசில் கவலைகள் மோதி மோதி நெஞ்சம் மரத்துப்போயிருந்தது. இறுகிப்போன இதயத்துக்குள்ளிருந்து குறுகுறுக்கும் நப்பாசையும், ஒதுக்கமுடியாத துயரத்தின் உறுத்தலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/97&oldid=881670" இலிருந்து மீள்விக்கப்பட்டது