பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

வள்ளலார் இராமலிங்க அடிகளார் களைந்து போட்ட ஆடை மணந்ததாக அவருக்கு அனுக்கமாயிருந்தோர்கூறி :புள்ளனர். அம்மணமும் முல்லை மணமாக இருக்கலாம். அடி களாரது விடலை ஒழுக்கத்தை-தூய்மையை நாம் அறிவோம்.

விவேகானந்த அடிகளார் களைந்து போட்ட உடை முல்லே மணம் வீசியதாகக் கூறுவர்; எழுதியுள்ளனர்.

இவைபோன்ற செவிவழிச் செய்திகள் பல. தமிழ் மருத்துவ முறைகளில் இக்கருத்து குறிக்கப்படுகின்றது.

எனவே, நெறியில் நிற்கும் இள ஆடவர் உடல் மணக்கும் என்பதும் அந்த மணம் முல்லே மணம் என்பதும் அரிசில் கிழார் மலர்த்திய உண்மை,

ஆண்டாள்காச்சியார் ஆன்ம உலகில் ஒரு காதற் பேழை கண்ணனுக்காகக் கலங்கிய ஏழை. கண்ணனைத் தழுவத் துடித்த அந்தக்கன்னி கனவு கனவாகக் கண்டாள் அவனது இதழ்களே முத்தமிட்டுச் சுவைக்கத் துடித்தாள். அவன் சங்கை வாயில் வைத்து ஊதினவன். அவனது இதழ்கள் பட்ட சங்கின் பேற்றை எண்ணினுள். அந்தச் அவையில் அந்தச் சங்கிடமே வினவிள்ை.

2 ' கற்பூரம் நாறுமோ? -

கமலப்பூ நாறுமோ திருப்பவளச்செவ் வாய்தான்

தித்திக்குமோ? " என்று, வினவி இன்பமடை கின்ருள். அவளது உள்ளத்தில் கண்ணனது உடலில் கற்பூர மணமும் தாமரை மணமும் தோன்றின. தெய்வத் தொடர்பில் கற்பூரமாக கிளேத்தாள். அவன் மென்ற தம்பலத்தில் பச்சைக் கற்பூரம் இட்டுக்கொண்டவன். அந்த மணமாகவும் கருதி யிருக்கலாம் 'கையுங் காலும் முகமும் தாமரை ' யாக வண்ணிக்கப்படுவதால் தாமரை மணக்குமோ என்ருள்.

2 காச்சியார் திருமொழி : ? : 1.