பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கையின் பரிசு

மணம் என்றதும் 5ம் நினேவில் முந்துவது மலர்தான். தமிழ்ப் பெருமக்களாகிய நமது முந்தையர் வாழ்வியலில் மலரைப் பயன்படுத்திக்கொண்டதிறம் கய ப்பு ம் வியப்பும் கல்குவதாகும்.

தமிழர்தம் வாழ்வியல் உலகிற் புதுமையானது; நெறி கொண்டது; தனிச்சிறப்புடையது. வாழ்வியலுக்கு இலக் கணம் வகுத்துள்ள பாங்கு தமிழ் பெற்றுள்ள தனிப்பாங்கு என்பது உலகோர் உணர்ந்துள்ள உண்மையாகும்.

வாழ்வியலின் நெறியைத் தமிழர் திணை என்னும் சொல்லால் குறித்தனர். தினே' என்பதற்கு ஒழுக்கம் என்று பொருள். செயலே-நற்செயலே-ஒழுகும் நற்செயலே-கடைப் பிடித்து ஒழுகும் நற்செயலைத் தமிழர் ஒழுக்கம் எனக் குறித் தனர். அவ்வொழுக்கத்தை-திணேயை அகத்திணை, புறத் தினே என இரண்டாக இயற்கைப்போக்கில் கண்டவர் தமிழர்.

இவ்விரண்டையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் நமது கையிலும் காணலாம்:

கை, அகங்கை புறங்கை என்னும் இரண்டு அமைப் பினது. அகங்கை போன்றது அகப்பொருள்: புறங்கை போன்றது புறப் பொருள். அதனிலும் ஒரு நயமான பொருத்தம் உண்டு.

அகங்கை, உள்ளே மட்டும்; முடங்கும்

அகப்பொருளும் உள்ளத்தே அடங்குவது உணர்வாலும் உள்ளிடம் கொண்டது; வீட்டு வாழ்வாலும் உள்ளிடம் கொண்டது

அகங்கையின் மென்மைபோன்றே

பெண்மை சிறந்து நிற்கும் அகப்பொருளும் மென்மையானது