பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

' " சொல்லெனும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்

நல்லிருந் தீந்தாது காறுதலால் - மல்லிகையின்

வண்டார் கமழ்தாம மன்றே; மலையாத

தண்டாரான் கூடல் தமிழ்." - இது பாமாலையில் ஒரு. மல்லிகை மாலை. செய்யுள்களின் தொடர் திருவள்ளுவr மாலையாயிற்று. மாலை என்னும் நூல் வகை சிற்றிலக்கிய வகைகளுள் உள்ளன. இரண்டைமணி மாலே, மும்மணி மாலை, கான்மணி மாலை முதலிய பலவகை நூல்கள் மாலையின் பெயரால் பிறந்தன. 'குறிஞ்சிப்பாட்டு”, “முல்லப்பாட்டு என்னும் மலர்ப் பெயராலமைந்த நூல்கள் இரண்டு பத்துப் பாட்டில் இடம் பெற்றுள்ளன.

மாக்தர் தம் உறுப்புகள் பலவற்றிற்கும் மலரையே உவமையாகக் கொண்டனர். இலவம்பூ வாய் இதழுக்கு, உவமையாயிற்று. அதனுல் வாய் மலராயிற்று. அந்த வாய் பேசுவதைத் 'திருவாய் மலர்ந்தார்’ எனக் குறித்தனர்.

பெருக்கத்திற்கு அஞ்சி இத்துடன் நிறுத்தலாம். முற்றும் கூறின் ஒவ்வொரு தனி நூலாகும். அத்துணை அளவில் செய்திகள் மலர்பற்றி மாந்தர் தொடர்பில் உள்ளன.

மாந்தர் இயற்கையைப் பல்வகையிலும் பயன்படுத்து. கின்றனர். மலரைப் பொறுத்தவரை இன்பம், துன்பம்

ஆகிய எதற்கும் கொள்கின்றனர்.

மலர் மாந்தர் பெற்றுள்ள இயற்கையின் பரிசு இயற்கைப் பரிசுகளில் முதன்மைப் பரிசு.

ஏழு பிறப்பு

மக்களது வாழ்வை மணக்கச் செய்யும் மலருக்கும் வாழ்வு உண்டு. மாந்தன் பிறந்து வளர்ந்து சிறந்து மறை:

12 திருவிளையாடற்புராணம்: நாமகள் வாழ்த்து.