பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

மங்கல முத்திரை.

திருமணம் இல்லற வாழ்வின் நுழைவாயில். ஆயிரங் காலத்துப் பயிருக்குப் பொன்னேர் பூட்டும் விழா. மணம் என்னும் சொல்லே இவ்விழாநிகழ்ச்சியைக் குறிக்கும் திருமணம் என்பது அழகான சொல்வடிவம். இது பிற்கால வடிவமைப்பு என்ருலும் மங்கல உணர்வை எழுப்பும் சொல் லாக அமைந்தது.

மணமங்கல நிகழ்ச்சி ஒவ்வொன்றும் ஒவ்வொரு மண மாகவே கொள்ளப்படும். இன்றியமையா மங்கல நிகழ்ச்சி * வதுவை மணம்” எனப்பட்டது. இங்கிகழ்ச்சியில் மங்கலச் சின்னம் பூட்டலே இன்றியமையாதது,

முற்காலத்தில் மங்கலச் சின்னமாக மங்கல நாண் பூட்டல் மட்டும் இருந்ததில்லை. மங்கல நாண் அல்லது தாலி அணிவிக்காமல் சான்ருேர் முன்னிலேயில் அவர் வாழ்த்த மணமகன்' முல்லைச் சூட்டு” என்னும் முல்லைச் செண்டைத் தலையில் சூட்டுவான். மங்கல மகளிர் முல்லை :யும் கெல்லும் தூவி வாழ்த்துவர். திருமணம் நிறைவேறும்.

மங்கல அணிகளாகப் பல அமைந்திருந்தன. காதணி. மூக்கணி, மார்பணி, கைவளை ஆகியன அமைந்திருந்தன காதணியும் முக்கணியும் மங்கல அணி அளவே. மங்கலச் சின்னமாக மார்பணியாம் தாலியும் தொடி என்னும் கைவளேயும் அமைந்திருக்தன. ஆல்ை, தாலி என்னும் மங்கல நாணே இலக்கியங்கள் தெளிவாகவும் பிடிப்பாகவும் குறிக்கவில்லை.

  • ' ஈகை அரிய இழை அணி ' என்கின்றது புற கானூறு.

? " வதுவை மன்றல் மணம் கலியாணம்"

- பிங்கலம் : 1951 * புறநானூறு: 127: 5 -