பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

34 "வெண்ணிற மலரும், தண்ணறுஞ் சாலியும்

சென்னியும் உச்சியும் கேடுபடத் தெளித்து' வாழ்த்

தியதைப் பெருங்கதை வண்ணிக்கின்றது. இதனை மேலே

விரிவாகக் காணலாம்.

அடுத்து, முதலிரவு மங்கலக் கட்டில் முல்லை மலராலேயே ஒப்பனை

செய்யப்படும். மணமக்களை முல்லே மலரின், 'சின்மலர் கொடுதுரவி மங்கல நல்லமளி ஏற்றுவர்.

ഉത്ഖ யாவற்றையும் தொகுத்து கோக்கிளுல் முல்லே

மங்கலமணத்தில் இன்றியமையா இடம் பெறுவதும். கற்பின் சின்னமாக அமைந்து இல்லறப் புகழை நிலைநாட்டு

வதும் இன்ப வாழ்வில் நீங்காச் சின்னமாக நிற்பதும்

விளங்கும்.

எனவே,

தாலியும் ஒரு மங்கல முத்திரை. கைவளையும் ஒரு மங்கல முத்திரை. முல்லை மலரும் ஒரு மங்கல முத்திரை. இவற்றுள் முன்னிரண்டும் நிலைத்து விளங்கும் முத்திரைகள். முல்லை அன்றன்று புதிது புதிதாக மணக்கும் முத்திரை. முன்னவை இரண்டும் செயற்கை முத்திரைகள். முல்லையோ இயற்கை முத்திரை. முல்லை மணமங்கல முத்திரை.

கணம் பரப்பும் முத்திரை.

二露率

பெருங்கதை: இலாவண காண்டம்: 4: 152, 15ச