பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

உள்ள நெல்லை எடுத்து உரலில் இட்டுக் குற்றுவர். குற்றுவ திலும் முதற் குற்றிலேயே அரிசியாகும் காவி நிற அரிசியை -தீட்டி வெள்ளேயாகாத அரிசியையே வாய்க்கரிசியாகக் கொண்டனர். இது "கொழி அரிசி" எனப்படும். இவ்வாறு வாய்க்கரிசிக்கென நெல்லெடுத்துக் கொட்டுவதைப் பிற் காலத் தனிப்பாடல் ஒன்று,

7 " பரந்தாடி மாரடித் துறவினர்கள் வாய்க்கரிசிப்

படிகெற் கொணர்ந்து கொட்ட"

-என்று பாடிக்காட்டுகின்றது.

இவ்வாறு அச்சந்தரும் தெய்வங்களுக்கும், அவலந்தரும் பிணங்களுக்கும் பலிப்பொருளான அரிசி எவ்வாறு திருமணத் தில் தூவப்படும் வாழ்த்துப் பொருள் ஆயிற்று மஞ்சள் பூசிக்கொண்டதால் ஆயிற்ரு: அவ்வாறு ஆணுல், அரிசி மஞ்சள் பூசி மங்கலப் பொருள் ஆனதைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் எங்கேனும் குறித்திருக்கும். ஆட்டுக் குருதி கலந்து பலிப்பொருள் ஆனது குறிக்கப்பட்டமை போன்று இஃதும் குறிக்கப்பட்டிருக்கும். பின்னர் எவ்வாறு இப் பழக்கம் புகுந்தது? இது புதிதாகப் புகுத்தப் பட்டதா? மற்ருெரு தமிழ் மரபைத் தள்ளிவிட்டு இடம் பெற்றதா?

நெல் வழிபாட்டுப் பொருள். .

மேலே சக்கரவாளக் கோட்டத்தில் சிதறிக் கிடந்தன வாகக் காணப்பட்ட பொருள்களில் பொரியும் கெல்லும் அரிசியுடன் கூறப்பட்டன. அவற்றுள் அரிசி மட்டும் " சில் பலி என்று அடைமொழி கொடுக்கப்பட்டு மற்றைய இரண்டிலிருந்தும் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்துக் காட்டுவது ஓர் இலக்கிய உத்தி. மூன்றனுள் அரிசி மட்டும் பலிப்பொருள். மற்றைய இரண்டும் பலிப்பொருள் அல்ல. என அறிவிக்கும் குறிப்பு இது. .

"7 தனிச்செய்யுட் சிந்தாமணி : அவிநாசிப் புலவர் பாடல்: 1.