பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

22 மெளவலும் தளவமும் கற்பும் முல்லை" - என்று சேந்தன் திவாகரம் முல்லைக்கொரு சொல் "கற்பு’

என்பதைக்கூறுகின்றது.

‘கட்டியங்காரன் அநங்கமாலை என்பவளது கற்பைப் பறித்தான்' - என்பதைக் கூறும் திருத்தக்க தேவர் கற்பை முல்லை என்று குறித்து, -

’ "தானுடை முல்லை எல்லாம் தாது.உகப் பறித்திட்டானே" - எனப் பாடினர்.

மங்கல மடந்தையர்க்கு இன்றியமையாத தொடர் புடைய மலராக முல்லை மலர் பல முனைகளில் இடம்பெற்றது. பல இலக்கியங்களும் இதனைப் பன்னிப் பன்னிப் பேசு கின்றன.

" முல்லை சான்ற கற்பின் மெல்லியல்"

- சிறுபானற்றுப்படை: 80.

"முல்லை சான்ற கற்பின் மெல்லியற் குறுமகள்"

- - நற்றினே : 142.

“முல்லை சான்ற கற்பின் மெல்லியற் குறுமகள்"

அகநானூறு 374, இவ்வாறு முல்லையைச் சான் ருக்கிக் கற்பைக் காட்டுகின்றன. இவற்றிற்கு விளக்கம் கூறிய உரையாசிரியர்கள்,

" முல்லை சூடுதற்கு அமைந்த கற்பு" - என்றும்

"கற்பின் மிகுதி தோன்ற முல்லை குடுதல் இயல்பு"

2 சேந்தன் திவாகரம்: மரப்பெயர்: 197. 23 சீவக சிந்தாமணி : 686.