உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

.பாண்டத்தில் அரிசியையும் தேங்காயையும் கொண்டு

செல்வர். புத்தாடை உடுத்திப் புதுப்பொலிவுடன் செல்வர்.

அதற்கு மாற்று வரிசையாக விழாவை நிகழ்த்துவோர் முறுக்கு சீடை முதலிய தின்பண்டங்களைக் கொடுத் தனுப்புவர்.

தமிழர் இவ்வாறு பாண்டத்தில் அரிசியையும் தேங்காயை பும் உறவினர் இல்லத்திற்கு ஏந்திச் செல்வதுண்டு. அஃது எது கருதி? எப்பொழுது? யாவரும் அறிவோம். அவற்றை எடுத்துச் செல்வது புத்தாடை உடுத்தியன்று பழைய உடையுடன் முக்காடிட்டுச் செல்வர். ஒய்யார மகிழ்ச்சி :புடன் அன்று; ஒப்பாரி வைத்து ஓலமிட்டுச் செல்வர். ஆம், சாவு நேர்ந்த இல்லத்திற்குப் பிணத்திற்குரிய வாய்க்கரிசி யாகவே அரிசியைக் கொண்டு செல்வது தமிழ் மரபு.

எனவே, அரிசி தமிழர்க்குப் பொது நிகழ்ச்சிகளிலோ தனி நிகழ்ச்சிகளிலோ மங்கலப் பொருள் அன்று; ஆரியர்க்கு அவலப் பொருளும் அன்று. அரிசி தமிழர்க்கு அவலப் பொருள் என்பதை ஆரியர் அறிந்துவைத்திருந்தனர். ஆயினும், தமக்கு எளிதாகும் வாய்ப்பை கினேந்தும், தம் மரபுக்கு ஏற்பவும், தம் மொழி புகுத்தியும் தமிழர் மரபை மறையச் செய்தனர். அன்னர் மறைவழிச் செய்யும் கரண கிகழ்ச்சிகளில் நீராட்டும் கரணம் ஒன்று. இந்த நீராட்டும் நிகழ்ச்சியின்போது பால், தயிர், எண்ணெய், பழச்சாறு முதலியவற்றைக் கொள்வர். சில நேரங்களில் நீராட்டத் தயிர் இல்லாதுபோனல், அதற்காகக் காத்திராமல் இருக் கும் பாலில் எலுமிச்சைச் சாற்றில் ஒரு துளி விட்டு அது தயிர் ஆகிவிட்டதாகக் கொண்டு கரணம் செய்து முடித்தலேக் காண்கின்ருேம். பாலேயே தயிராகக் கொண்டு அமைதி செய்துகொள்வர். இதுபோன்றே ஓர் இல்லத்தின் மண கிகழ்ச்சியின்போது வாழ்த்துப் பொருளாக நெல் இல்லாத சூழ்நிலையில் அந்நேரத்தை வாய்ப்பாக்கிக்கொண்டு அந் கிகழ்ச்சி தடங்கலில்லாது நிகழ இருக்கும் அரிசியைப் பயன்