பக்கம்:முல்லை மணம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் காணுதது 101

'இந்த அம்மிக் கல்லையா? யார் இது வேண்டும் என்று சொன்னர்கள்?"

பிராட்டிதான்.' ஜாம்பவான் சற்றே சிரித்துக்கொண்டார். எவ்வளவு சிறந்த கிலேயில் இருந்தாலும் பெண் இயல்பு போகவில் இலயே! என்பதை நினைத்துத்தான் சிரித்திருக்க வேண்டும். உடனே ஆஞ்சநேயரிடம், "நீ சிறிது இரு. நான் பிராட்டி யைக் கண்டு இரண்டு வார்த்தை பேசவேண்டும். பேசின. பிறகு, பிராட்டி 'இது அவசியம் வேண்டும் என்று சொன் ல்ை எடுத்துச் செல்லலாம்' என்ருர். பெரியவர் சொல் வதற்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று ஆஞ்சநேயன் சிறிதே நின்ருன்.

ஜாம்பவான் வேகமாகப் பிராட்டி தனியாக இருக்கும் இடம் சென்ருர். ஒரு விண்ணப்பம்" என்று கூறினர்.

"என்ன, சொல்லலாமே !' "நான் வெகு காலம் கண்டவன். என்னுடைய வயசு எனக்கே தெரியாது." -

"ஆமாம்; ஜாம்பவான் என்ருல் பழையவர் என்று மக்கள் வழங்கும்படி, உம்முடைய நீண்ட ஆயுளேப் பற்றிய புகழ் உலக முழுவதும் பரவி இருக்கிறதே அது எனக்குத் தெரியாதா?” - - -

" நான் மூன்று உலகமும் சுற்றியவன்." "அப்படியா ? . - -

அமிர்தம் அமிர்தம் என்று தேவர்களெல்லாம் சொல்லிக்கொள்கிருர்களே, அதைக் கடையும்போது நான் அருகில் இருந்தேன். நானும் ஒரு கை பிடித்துக் கடைந்த

' உமக்கு மாத்திரம் அமிர்தத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்களா? - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/107&oldid=619721" இலிருந்து மீள்விக்கப்பட்டது