பக்கம்:முல்லை மணம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 முல்லை மணம்

1. அமிர்தத்தை உண்ணுமலே கான் சிரஞ்சீவியாக இருக்கிறேன். பிரம்மாவுக்கு இப்போது நாலு முகங்கள் இருக்கின்றன. ஆதி காலத்தில் ஐந்து முகங்கள் இருந் தன. அவர் அகங்காரப்பட்டதல்ை பரமசிவன் ஒரு தலை யைக் கிள்ளி விட்டான். அவர் ஐந்து முகத்தோடு இருந்த போது, நான் அவரைப் பார்த்துப் பேசியிருக்கிறேன்."

"அப்போதும் அவன் சிருஷ்டித் தொழில்தானே பண் ணிக்கொண்டிருந்தான்?"

"ஆமாம் ; சிருஷ்டியிலே எத்தனை விசித்திரம் ! அப் பொழுதெல்லாம் எல்லா மலைகளுக்கும் சிறகுகள் இருந்தன. பிற்பாடுதான் இந்திரன் அந்தச் சிறகை வெட்டிவிட்டான். மலைகள் சிறகோடு இருந்த காலம் எனக்குத் தெரியும்.”

'இப்போதுகூட மைகாகம் என்ற மலே கடலுக்குள் ஒளிந்துவிட்ட தென்றும், அதற்குச் சிறகுகள் இருக் கின்றன என்றும் சொல்கிருர்களே !'

"ஆமாம் ; உண்மை. கடல் என்றவுடன் கினேவுக்கு வருகிறது. இப்போது இந்தப் பெரிய கடல் முழுவதும் ஒரே உப்பு நீராக அல்லவா இருக்கிறது? மிகப் பழைய காலத்தில் நல்ல நீரே நிரம்பியிருந்தது. அதையும் நான் கண்டிருக்கிறேன்.'

'உப்பு ர்ே இல்லாத கடலா '-பிராட்டி வியந்தாள்.

"ஆமாம் ; மற்ருெரு செய்தி. இப்போது மன்மதன், அங்கம் பிறருக்குப் புலப்படாமல் அனங்களுகத் திரி கிருன்.

'பரமசிவமே அவனே எரித்தாராமே?”

"ஆமாம்; அவன் அப்பெருமானிடம் குறும்பு செய் தான். நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்து விட்டான். மன்மதன் எரிந்து உருவத்தை இழப்பதற்கு முன்பு அவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/108&oldid=619723" இலிருந்து மீள்விக்கப்பட்டது