பக்கம்:முல்லை மணம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் காணுதது 103

நான் பார்த்திருக்கிறேன். என்ன அழகான வடிவு ! கையில் கரும்பு வில்லுடன் கின்ருல் ஆயிரம் கண்கள் வேண்டும், அவனைப் பார்க்க. பைத்தியக்காரப் பிள்ளை, எரிந்து சாம்பலானன் ! நல்ல வேளை, சிவபெருமான் கருணை கூர்ந்து இரதிக்கு மட்டும் அவன் வடிவம் தெரியட்டும் என்று அருளினன்.”

'பரம கருளுநிதி அல்லவா அவர்?" 'அதற்கென்ன சந்தேகம்? அன்று அமரர் காவைத் தொங்கப் போட்டுக்கொண்டு அமிர்தம் கடைந்தார்களே ; அமிர்தம் வருவதற்கு முன் ஆலகாலந்தான் எழுந்தது. அதை அவர்களிடம் உள்ள கருணையால் தான் ஏற்று விழுங்கிக் கண்டத்தில் வைத்துக்கொண்டான் பெருமான். அதல்ை லேகண்டன் ஆன்ை. நீலகண்டம் இல்லாமல் சுத்தக் கழுத்தோடு அந்தப் பெருமான் இருந்தபோது முதல், கான் தரிசித்துக்கொண்டிருக்கிறேன்.”

'இவற்றையெல்லாம் இங்கே இருப்பவர்கள் யாரும் பார்த்திருக்கமாட்டார்கள் அல்லவா?' என்று பிராட்டி கேட்டாள்.

' இவர்கள் யாவரும் நேற்றுப் பிறந்த குழங்தைகள் ! இவர்களுக்கு எங்கே இந்தச் செய்திகள் தெரியும்? ஒன்றும் தெரியாது. இந்த இந்திரன் ஆயிரங் கண்ணுடையவனுக இருக்கிருன். இவனுக்கு முகத்தில் மாத்திரம் இரண்டு கண்கள் இருந்த காலத்தை நான் அறிவேன்.”

சீதாபிராட்டி சிறிதே நாணினுள். " எப்போதாவது ஒரு முறை முனி பத்தினி அகல்யா தேவியைத் தரிசிக்கவேண்டும்' என்று சொன்னுள். பிராட் டிக்கு, இந்திரனுக்கு ஆயிரம் கண் வந்ததற்குக் காரணமான வரலாறு இப்போது கினேவுக்கு வந்திருக்க வேண்டு மென்று ஊகித்துக்கொண்டார், ஜாம்பவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/109&oldid=619724" இலிருந்து மீள்விக்கப்பட்டது