பக்கம்:முல்லை மணம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 முல்லே மணம்

'இப்படியே பழைய கிகழ்ச்சிகளே யெல்லாம் சொல் லிக்கொண்டே இருக்கலாம். அதற்கு நேரம் இல்லை" என்ருர் ஜாம்பவான். - -

'திடீரென்று உமக்கு வயசான கிழவர்களுக்கு வரு வதுபோல் பழைய கதைகள் கினேவுக்கு வருவானேன்?” என்று கேட்டாள் பிராட்டி.

அப்போதுதான் ஜாம்பவானுக்கே கினேவு வந்தது, நாம் எதற்காக இந்தப் பேச்சைத் தொடங்கிளுேம் என்று.

'எனக்கும் வயசாகிறது. அதனால் மறதி வந்து விட்டது. இப்போது ஒரு சமாசாரம் காதில் விழுந்தது. எத்தனையோ காலமாக எத்தனையோ கிகழ்ச்சிகளைக் கண்ட எனக்கு அந்தச் செய்தி புதிதாக இருந்தது. எவ்வளவோ பெரிய மனிதர்களுடன் நான் பழகியிருக்கிறேன். ஆன லும் இப்படி ஒரு காரியத்தை அவர்கள் செய்ததில்லை.'

பிராட்டிக்கு ஒன்றும் விளங்கவில்லை. 'நீர் காணுதது என்ன இப்போது கடந்து விட்டது ?" என்று படபடப் போடு கேட்டார்.

ஆஞ்சநேயன்தான் சொன்னன். ஏதோ ஓர் அற்ப அம்மிக் கல்லே அயோத்திக்குக் கொண்டு போக வேண்டு மென்று தாங்கள் அபிப்பிராயப்பட்டீர்களாம்?.” -

"ஆமாம், அது உண்மைதான். அதற்கும் நீர் சொல்ல வந்ததற்கும் என்ன சம்பந்தம்'

"இலங்கை முழுவதையும் பிரபு இராமசந்திர மூர்த்தி விபீஷணனுக்கு வழங்கி விட்டார்.”

'அது எனக்குத் தெரியுமே!’ - 'இதில் உள்ள ஒவ்வொரு மணலும் வீ.பீஷண லுக்குச் சொந்தம்.' : . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/110&oldid=619725" இலிருந்து மீள்விக்கப்பட்டது