பக்கம்:முல்லை மணம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் காணுதது - 芷

"ஆமாம்."

'கொடுத்த சொத்தில் ஓர் இம்மியளவு غاية

திரும்பிப் பெறுவது பெரியவர்களுக்கு வழக்கம் இல்லை.

அம்மியானுலும் சரி, ஆனையானலும் சரி-காம் எடுத்துக் கொண்டு போனல், கொடுத்ததைத் திருப்பி வாங்கிக் கொண்ட பாவம் நேரும்.' ... "

பாவமா? சிதை சற்றே திகைத்தாள்.

"நான் சொல்லுகிறேன் என்று பிராட்டி சினம் . கொள்ளக் கூடாது. நான் உண்மையைச் சொல்ல வந்தேன். என்னுடைய இவ்வளவு கால அநுபவத்தில் எத்தனையோ கிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். கொடுத் ததைத் திருப்பி வாங்கிக் கொண்டவர்களே நான் பார்த் ததே இல்லை. இதைப் பிராட்டியின் திருச் செவிகளில் சார்த்த வேண்டுமென்றே வந்தேன்."

சீதை யோசனேயுள் ஆழ்ந்தாள். பின்பு, ஆஞ்சநேய னேக் கூப்பிடும் ' என்ருள். ஜாம்பவான், 'நானே சொல்லி விடுகிறேன் ” என்ருர். சரி; நல்ல வேளே! சமயத்தில் எனக்கு அறிவுரை கூறினரீர்” என்ருள் பிராட்டி. -

"அறிவுரையா? அப்படிச் சொல்லக் கூடாது. ஏதோ விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தோன்றியது; சொன்னேன்' என்று சொல்வி, ஜாம்பவான் காரியத்தைச் சாதித்துக்கொண்ட மகிழ்ச்சியோடு ஆஞ்சகேயனே கோக்கி ஓடினர். - - ஜாம்பவான் சொன்னவற்றை யெல்லாம் அமைத்து ஒரு புலவர் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிருர். புலவர் பெயர் இன்னது என்று இப்போது தெரியவில்லை. தமிழ் காட்டில் வழங்கும் தனிப் பாடல் இது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/111&oldid=619726" இலிருந்து மீள்விக்கப்பட்டது